Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு மட்டும் ஏன் இப்படி செய்றீங்க?.. ரோகித் சர்மா செய்த தவறு.. சுனில் கவாஸ்கர் கடும் விளாசல்!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை வேண்டுமென்றே ரோகித் சர்மா ஒதுக்கி வைத்திருந்தது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது. இதனால் முதல் நாளின் ஆட்ட முடிவில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து வலுவான நிலையில் இருந்தது.

வலுவான நிலை

வலுவான நிலை

இப்படிப்பட்ட கடினமான சூழலில் 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அஸ்வின் மீது நம்பிக்கை வைக்கவே இல்லை. 2வது நாளில் முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை மட்டுமே மாறி மாறி பயன்படுத்தி வந்தார் ரோகித் சர்மா. இதன் பின்னர் அக்‌ஷரிடம் சென்றுவிட்டார். இதனால் ஹேண்ட்ஸ்கோம் மற்றும் கேமரூன் கிரீன் நல்ல பார்டர்னர்ஷிப்பை அமைத்துவிட்டனர். இறுதியில் 55 நிமிடங்கள் ( 15 ஓவர்கள் ) கழித்து தான் அஸ்வினிடம் பந்து சென்றது.

அஸ்வினின் ஸ்ட்ரைக்

அஸ்வினின் ஸ்ட்ரைக்

பந்தை கையில் வாங்கிய அஸ்வின் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தினார். 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த ஹேண்ட்ஸ்கோம்-ஐ வீழ்த்தினார். இதன் பின்னர் அவருடன் சேர்ந்து உமேஷ் யாதவும் அட்டாக்கிற்கு வர 186 /4 விக்கெட்கள் என்று இருந்த ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்குள் 10 விக்கெட்களையும் இழந்தது. இதனால் அஸ்வினை முன்கூட்டியே கொண்டு வந்திருக்கலாம் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

கவாஸ்கர் பேச்சு

கவாஸ்கர் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், எதற்காக அஸ்வினை இவ்வளவு நேரம் ஒதுக்கினார் என்பது புரியவில்லை. 2 வலதுகை பேட்டர்கள் களத்தில் இருந்ததால் அவரை கொண்டு வரவில்லை எனக்கூறலாம். ஆனால் 2 இடதுகை ஸ்பின்னர்கள் வீசி மட்டும் என்ன ஆனது?.. இறுதியில் அஸ்வின் தானே ஹேண்ட்ஸ்கோம்பின் விக்கெட்டை எடுத்தார். அவர் தான் திருப்புமுனையை தந்தார்.

முக்கியம் இல்லை

முக்கியம் இல்லை

ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு டாப் கிளாஸ் வீரர். இடதுகை வீரரோ, வலது கை வீரரோ ? என்பது முக்கிய கிடையாது. எந்த வீரராக இருந்தாலும் அஸ்வினால் விக்கெட் எடுக்க முடியும். 450 விக்கெட்களை எடுத்தவருக்கு இது கூட தெரியாமல் போய்விடுமா??.. முன்கூட்டியே பந்தை கொடுத்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது.

 பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

எந்தவொரு அணியும் பேட்டிங்கில் 3வது வீரருக்கு முன்னதாக 7வது வீரரை அவ்வளவு சீக்கிரம் கொண்டு வராது. ஏனென்றால் 3வது நம்பர் வீரர் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார். அதனால் தான் டாப் ஆர்டரில் இருக்கிறார். எனவே பந்துவீச்சிலும் இதே போன்ற முறையை தானே பின்பற்ற வேண்டும். அஸ்வின் இருக்கும் போது எதற்காக மற்றவர்களை முன்கூட்டி கொண்டு வருகிறார்கள். அஸ்வினுக்கு மட்டும் இது தொடர்ந்து நடக்கிறது என சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 2, 2023, 13:54 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+