மும்பை : U19 கிரிக்கெட்டில் இருந்து வந்து தற்போது சிறப்பாக விளையாடி வரும் திலக் வர்மா உலகக் கோப்பை தொடரிலும் சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் திலக் வருமா 173 ரன்களை அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 57 என்ற அளவில் இருக்கிறது.

இப்படி இளம் வீரர்கள் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் கவாஸ்கர் பூமர் அங்கிள் போல் பேசி இருப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கவாஸ்கர் இளம் வீரர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல் பேசியிருக்கிறார். அதில் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் ஒரு வீரர் சிறந்து விளையாடுகிறார். ஆனால் நாட்டுக்காக விளையாடும்போது அனைத்துமே வேறு மாதிரி இருக்கும்.
உங்கள் மீதான எதிர்பார்ப்பு அழுத்தம் எல்லாமே அதிகமாக இருக்கும். இதனால் தான் பிரான்ச்சைஸ் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் நாட்டிற்காக விளையாடும்போது தடுமாறுகிறார்கள். குறிப்பாக அண்டர் 19 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் எல்லாம் அதேபோல் ஒரு செயல்பாட்டை சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்த முடியவில்லை.
ஏனென்றால் அது சிறுவர்கள் விளையாடும் தொடர். இது ஆண்கள் விளையாடும் தொடர். சிறுவர்களுக்கு எதிராக சிறுவர்கள் விளையாடும் போது அவர்கள் பார்ப்பதற்கு நன்றாக விளையாடுவது போல் தெரிகிறது. ஆனால் ஆண்களுக்கு எதிராக சின்ன பசங்கள் விளையாடும்போது திடீரென்று சேற்றில் சிக்கி தடுமாறுவது போல் விளங்குகிறார்கள். பல பிரான்சைஸ் கிரிக்கெட்டில் திறமைக்கான அளவுக்கோல் என்பது சிறியதாகவே இருக்கிறது.
அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். இதனால் இளம் வயதிலேயே பணம் சம்பாதித்தவுடன் அந்த இளைஞர்களுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அணைந்து விடுகிறது. மேலும் தங்களுக்கு தான் பணம் கிடைக்கிறதே என்ற நோக்கத்தில் அவர்கள் அப்படியே காலத்தை ஓட்டி விடுகிறார்கள் என்று கவாஸ்கர் கூறினார். கவாஸ்கரின் இந்த பேச்சு அர்த்தமற்றதாக இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.