Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் பிசிசிஐ பவர்.. பாகிஸ்தான் காலி.. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இருக்காது.. கவாஸ்கர் அதிரடி

மும்பை: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி நீக்கப்படும் அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) கலைக்கப்படும் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் இந்திய அரசு பல்வேறு விதங்களில் உறவுகளை முடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், கவாஸ்கரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்து சில மாதங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் சேர்ந்து நடத்தப்பட உள்ளது. ஆனால் தற்போது பாகிஸ்தானுடன் இந்தியா எந்தவிதமான உறவும் வைத்துக்கொள்ள விரும்பாத நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பையில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Asia Cup 2025 India Pakistan BCCI Sunil Gavaskar

இந்த விவகாரத்தில் பிசிசிஐ தனது சக்தியை பயன்படுத்தி என்ன செய்யும் என சுனில் கவாஸ்கர் அதிரடி கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். "'பிசிசிஐ, இந்திய அரசு என்ன சொல்கிறதோ அந்த முடிவைத்தான் எடுக்கும். ஆசியக் கோப்பை விவகாரத்திலும் வேறு எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படாது என நான் நினைக்கிறேன். இந்த ஆசியக் கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தலாம். சூழ்நிலையைப் பொறுத்து இது மாறலாம். ஆனால் இப்போதைக்கு எந்த மாற்றமும் நடக்கவில்லை. ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் இடம்பெறாது என்று நான் நினைக்கிறேன். இது எப்படி நடத்தப்படும் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்படவும் வாய்ப்புள்ளது".

"அதற்குப் பதிலாக, இது மூன்று நாடுகளின் சுற்றுப் பயணமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மூன்று அல்லது நான்கு நாடுகள் இணைந்து ஆசிய கோப்பைக்கு மாற்றாக விளையாடலாம். ஹாங்காங் அல்லது ஐக்கிய அரபு அமீரகம் அழைக்கப்படலாம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்பட்டு இதுபோன்ற ஒரு மாற்று கிரிக்கெட் தொடர் நடத்தப்படலாம். அடுத்த இரண்டு மாதங்களில் என்னென்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே இது அமையும்."

"ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்தும் இந்தியா விலகலாம். மேலும், இது நான்கு நாடுகள் அல்லது ஐந்து நாடுகள் பங்கேற்கும் தொடராக வங்கதேசம், இலங்கை அல்லது ஆப்கானிஸ்தானில் நடைபெறலாம். ஆனால் இந்தியா தான் இந்தத் தொடரை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்கிறது என்பதால், இந்தியாவில் தான் இந்தத் தொடர் நடக்கும்".

"ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் இப்போது நடக்கும் சம்பவங்கள் அவ்வாறாக உள்ளன. இரண்டு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொண்டால், அந்தச் சூழ்நிலைகள் கடினமாகவே இருக்கும். அந்த இரண்டு நாடுகளும் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட முடியாது'" என்றார் கவாஸ்கர்.

Story first published: Saturday, May 3, 2025, 14:31 [IST]
Other articles published on May 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+