Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர கூப்பிட வேண்டிய நேரம் இது.. இரட்டை சதம் விளாசியவரை அழைக்கும் கவாஸ்கர்.. இங்கிலாந்து டெஸ்ட் ரெடி!

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக இந்தியாவில் இருந்து ஒரு முக்கிய வீரரை பிசிசிஐ அழைத்தே ஆக வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட். 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் 6 வார காலம் இடைவெளி உள்ளதால், இந்திய வீரர்கள் இங்கிலாந்திலேயே தான் தங்கியிருந்து இருந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

பயிற்சி ஆட்டங்கள்

பயிற்சி ஆட்டங்கள்

இங்கிலாந்து தொடருக்கு நீண்ட இடைவெளி இருப்பதால் அதில் பயிற்சி ஆட்டங்களை ஏற்பாடு செய்ய பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்திய அணி வீரர்கள் அடுத்த 15 நாட்கள் இங்கிலாந்தின் துர்ஹாம் நகரில் தங்கவுள்ளனர். அங்கு அவர்கள் 2 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்ற பின்னர் தான் நாட்டிகமில் நடைபெறும் முதல் டெஸ்டுக்கு செல்லவுள்ளனர்.

ரோகித் சர்மா வேண்டாம்

ரோகித் சர்மா வேண்டாம்

இந்நிலையில் இந்த 2 பயிற்சி ஆட்டங்கள் குறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். அதில் அவர், இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடி குறித்து அணி நிர்வாகம் பரீசிலிக்க வேண்டும். ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து அமரவைத்துவிட்டு பயிற்சி ஆட்டங்கள் மூலம் புதிய ஓப்பனிங் ஜோடிக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இங்கிலாந்து களத்தில் எந்த ஜோடி சரியாக, உள்ளது, எந்த வீரர் சரியாக உள்ளனர் என்பது தெரியும்.

 முக்கிய வீரர்

முக்கிய வீரர்

என்னைப்பொறுத்தவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக மயங்க் அகர்வாலை அழைக்க வேண்டும். இந்தியாவுக்காக சிறப்பான பேட்டிங்கை தந்துவருகிறார் மயங்க் அகர்வால். ஓப்பனிங்கில் களமிறங்கி 2 முறை இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். எனவே பயிற்சி ஆட்டங்களில் சுப்மன் கில் மற்றும் அகர்வால் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். அதில் தெரிந்துவிடும் இந்தியாவுக்கு எந்த ஓப்பனிங் சிறப்பாக உள்ளதென்று என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 27, 2021, 21:25 [IST]
Other articles published on Jun 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+