Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் எங்கேப்பா..? டீமில் இல்லையா.. ஏன்? நேரடி வர்ணனையில் கோலிக்கு ஆப்பு வைத்த முன்னாள் கேப்டன்

Recommended Video

IND VS WI 2019 | அஸ்வினை கழட்டி விட காரணம் கிடைச்சாச்சு. குலதீப்புக்கு தான் இடம்!- வீடியோ

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் அஸ்வினை ஏன் எடுக்கவில்லை என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை வென்றது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது தொடங்கி இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் கடந்த வியாழன்று துவங்கியது.

அதில் ஆடும் லெவன் அணியில், அனுபவ வீரர்களான ரோகித் ஷர்மா, அஸ்வின், விருத்திமான் சாஹா, குல்தீப், உமேஷ் ஆகியோர் உட்கார வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பு

அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா இடம் பெறாததால் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால் கடந்த முறை வெஸ்ட் இண்டீசில் நடந்த தொடரில், தொடர் நாயகன் விருது பெற்றவர் அஸ்வின்.

கலக்கிய அஸ்வின்

கலக்கிய அஸ்வின்

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 11 டெஸ்டில் பங்கேற்றுள்ள அஸ்வின் 60 விக்கெட் 4 சதம் உட்பட 552 ரன்கள் விளாசியுள்ளார். ஒட்டு மொத்த டெஸ்ட் அரங்கில் 65 போட்டியில் பங்கேற்றுள்ள அஸ்வின் 2361 ரன்கள், 342 விக்கெட் கைப்பற்றி ஆல் ரவுண்டாக அசத்தியுள்ளார். அதே போல டெஸ்ட் அரங்கில் அதி வேகமாக 250 மற்றும் 300 விக்கெட் கைப்பற்றிய பவுலர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் அஸ்வின்.

ரொம்ப ஆச்சர்யம்

ரொம்ப ஆச்சர்யம்

இந்நிலையில் இதுதொடர்பாக டிவி வர்ணனையில் நேரலையில் பேசிய கவாஸ்கர், இந்திய அணித் தேர்வு என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. என்றார். அவர் மேலும் பேசியதாவது:

கவாஸ்கர் சாடல்

கவாஸ்கர் சாடல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மிக சிறந்த சாதனைகளை சொந்தமாக கொண்டுள்ளவர் அஸ்வின். இது போன்ற வீரர் ஆடும் லெவனில் இடம் பெற வில்லை. இது உண்மையிலேயே எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று அணி தேர்வு குறித்து மறைமுகமாக கேப்டன் கோலியை சாடினார்.

Story first published: Friday, August 23, 2019, 12:52 [IST]
Other articles published on Aug 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+