பாகிஸ்தானுக்கு இருந்த 2 தலைவலியும் போச்சு.. இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு இடம்? கவாஸ்கர் கருத்து
மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு இருந்த இரண்டு தலைவலியும் போய்விட்டதாக இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வரும் 23ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் நகரில் மோதுகிறது.
அன்றைய நாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில் தற்போது வானிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

ஷாகின் ஆப்ரிடி
இந்த போட்டி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணிக்கு இரண்டு பிரச்சனைகள் இருந்ததாக குறிப்பிட்டார். பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்த ஷாகின் ஆப்ரிடி காயம் காரணமாக இரண்டு மாதங்கள் விளையாடாமல் இருந்தார். இதனால் அவர் எப்படி பந்துவீசுவார் என பாகிஸ்தான் அணியில் ஒரு கலக்கம் இருந்தது.

ஃபில்டிங் பிரச்சனை
ஆனால் பயிற்சி ஆட்டத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டார். எப்போதும் போல் யாக்கர்களை அபாரமாக வீசி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவர் குறித்து இருந்த சந்தேகம் பாகிஸ்தானுக்கு இல்லை. மேலும் பாகிஸ்தான் அணியில் ஃபில்டிங் பிரச்சனை இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

ரிஷப் பண்ட்க்கு இடம்?
இதனால் அவர்களுக்கு இருந்த இரண்டு பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாக நான் கருதுகிறேன். இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால் ரிஷப் பண்டை சேர்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்திய அணி நிர்வாகம்,ஹர்திக் பாண்டியாவை ஐந்தாவது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்தினால் மட்டுமே ரிஷப் பண்ட்க்கு இடம் கிடைக்கும்.

ஹர்திக் பாண்டியா
அப்போது ரிஷப் பன்ட் ஆறாவது இடத்திலும், தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்திலும் பேட்டிங் செய்வார்கள். ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஆறாவது பந்துவீச்சாளராக இருந்தால் அப்போது ரிஷப் பண்ட்க்கு அணியில் இடம் இருக்காது. மேலும் ரிஷப் பண்ட் வெறும் 3 ஓவர் தான் பேட்டிங் பிடிப்பார் என்று நிலை வந்தால், அந்த பணியை தினேஷ் கார்த்திக் செய்து விடுவார். இதனால் பண்ட்க்கு வாய்ப்பு இருக்காது.


Click it and Unblock the Notifications