Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர் தான் இந்திய அணியை காப்பாற்றுவார்”.. டி20 உலகக்கோப்பைகான வீரர்கள் தேர்வு.. கவாஸ்கர் பலே ஐடியா!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய உதவியாக ஒரே ஒரு இளம் வீரர் இருப்பார் என் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.

இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின் பக்கம் ரசிகர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் முழு உடற்தகுதியுடன் உள்ளதால், முக்கிய மாற்றங்களை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவாஸ்கர் அறிவுரை

கவாஸ்கர் அறிவுரை

இந்நிலையில் அணியில் தீபக் சஹார் இடம்பெற்றே தீர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தீபக் சஹார் தான் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார் எனக்கூறுவேன். ஆஸ்திரேலியா போன்ற களத்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கும். அப்போது பவர் ப்ளே ஓவ்ர்களில் புதிய பந்தில் விக்கெட் எடுக்கக்கூடிய வீரராக தீபக் சஹார் தேவை

நல்ல பலன்

நல்ல பலன்

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றால் 4 -5 வேகப்பந்துவீச்சாளர்கள் வரை அழைத்து செல்ல வேண்டும். அதில் தீபக் சஹார் மிக முக்கியமாக தேவை. எனவே வரும் டி20 உலகக்கோப்பையில் தீபக் சஹாரை சேர்ப்பது இந்திய அணிக்கு பெரிய பலனை கொடுக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

இந்திய அணியை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் என 4 பவுலர்கள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளனர். 5வது பவுலராக தீபக் சஹார் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எதுவாக இருந்தாலும் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தெரிந்துவிடும்.

Story first published: Sunday, September 11, 2022, 15:26 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+