“இந்தியா ஒன்னும் ஜெயிக்கல”.. சுனில் கவாஸ்கர் மறைமுக தாக்கு.. புரிந்துக்கொள்வாரா ரோகித் சர்மா??
அடிலெய்ட்: இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய போட்டி குறித்து அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பி வரும் சூழலில் சுனில் கவாஸ்கர் தரமான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தனது 4வது லீக் ஆட்டமாக வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கடைசி ஓவர் வரை சென்று த்ரில்லாக போட்டி முடிந்தது.
இந்த போட்டியில் 68 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் ஆடி வந்த வங்கதேச அணி, திடீரென விக்கெட்களை இழந்து தோல்வியடைந்தது. குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் ஆட்டத்தை முற்றிலும் இழந்துவிட்டது.

விமர்சனங்கள்
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை வங்கதேச அணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மழை ஈரம் காய்வதற்கு முன்னதாகவே போட்டியை தொடங்கியதாகவும், விராட் கோலி போலியாக ரன் அவுட் செய்ய முயன்ற போது அதற்கு நோ பால் பெனால்டி கொடுக்காததும் பெரிய தவறு என அந்த அணி சார்பில் ஐசிசியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சுனில் கவாஸ்கர் பேச்சு
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு நடுவே சுனில் கவாஸ்கர் முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், 7 ஓவர்களில் விக்கெட் விழாமல் 66 ரன்களை அடித்திருந்தனர். ஓவருக்கு 9ரன்கள் தேவை என்பதை சரியாக செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் டார்கெட் குறைக்கப்பட்டவுடன் வங்கதேச பேட்ஸ்மேன்கள் பதற்றமடைந்துவிட்டனர். ஓவருக்கு அதே 9 ரன்கள் தான் தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை கவனிக்கவில்லை.

தோற்றுவிட்டனர்
புத்திசாலிதனமான விளையாடி ரன் எடுப்பதை தவிர்த்து, சிக்ஸர் விளாசுவதை முக்கிய திட்டமாக மாற்றினர். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்திய பவுலர்கள் கேட்ச்-க்கு ஏற்ற வகையில் பந்துகளை வீசி விக்கெட் எடுத்தனர். என்னைப்பொறுத்தவரை இந்திய அணி வெற்றி பெறவில்லை. வங்கதேசம் தான் வெற்றியை தவறவிட்டுள்ளது.

அடுத்த ஆட்டம்
இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் வரும் நவம்பர் 6ம் தேதியன்று மதியம் நடைபெறவுள்ளது. இதுதான் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications