Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு கணக்கு போடாதீங்க.. ஸ்பின்னர்களை விட அவர் தான் அச்சுறுத்துவார்.. கவாஸ்கர் விநோத கருத்து- காரணம்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் என கருத்துகள் பரவி வரும் சூழலில், அவை தவறு என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை நாக்பூரில் தொடங்கவுள்ளது. இது கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை என்பதால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு உள்ளன.

இதற்காக இரு அணி வீரர்களும் கடைசி கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் தீவிர முனைப்புடன் உள்ளனர்.

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே இந்திய களங்களில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்த போதும் நாக்பூரில் நடக்கும் முதல் போட்டியிலும் ஸ்பின்னுக்கு ஏற்ற வகையில் தான் பிட்ச் உருவாக்கப்படுகிறது. இதற்காக இந்தியாவை சேர்ந்த இளம் ஸ்பின்னர்களை வரவழைத்து ஆஸ்திரேலிய பேட்டர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

லியோன் அச்சுறுத்தல்

லியோன் அச்சுறுத்தல்

அந்தவகையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக ஆஸ்திரேலிய அணியில் நாதன் லியோன் தான் இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லியோன் 94 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்திய மண்ணில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் நாதன் லியோன் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். சராசரியாக 25.26 ரன்களுக்கு ஒருமுறை விக்கெட்டை எடுத்துவிடுகிறார். குறிப்பாக கோலி மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் இவருக்கு எதிராக திணறுகின்றனர்.

கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

இந்நிலையில் லியோனை அச்சுறுத்தலாக நினைப்பது தவறு என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாதன் லியோனை விட வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பவராக இருப்பார். கம்மின்ஸ் முதன் முதலில் 5 விக்கெட் ஹவுல் எடுத்தது ஆசிய கண்டத்தில் தான். லியோன் ஒரு டாப் பவுலர் தான். எப்போதுமே அச்சுறுத்தல் தருபவர். ஆனால் இந்திய மண்ணில் கம்மின்ஸ் போன்ற அட்டகாச பவுலர் தான் எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்துவார். அதனை கடந்த காலங்களில் பார்த்திருப்போம்.

சமாளிக்கனும்

சமாளிக்கனும்

ஆஸ்திரேலிய அணி இத்தனை நாட்களாக வெற்றிகரமாக இருக்கிறது என்றால், அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் செய்யும் பணிகள் தான் காரணம். ஜோஸ் ஹாசல்வுட் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் கம்மின்ஸை மட்டும் எப்படியாவது சமாளித்துவிட்டால், இந்தியாவுக்கு நல்லது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

டிராவிட் அதிரடி

டிராவிட் அதிரடி

இது ஒருபுறம் இருக்க, போட்டிக்கான நாக்பூர் பிட்ச்-ல் அதிரடி மாற்றத்தை கேட்டுள்ளார் ராகுல் டிராவிட். பிட்ச்-ல் முதல் 2 நாட்களுக்கு சாதாரணமாகவும், 3வது நாளில் இருந்து அதிகப்படியான ஸ்பின்னும் இருக்கும் வகையில் பிட்ச் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளில் இருந்தே நன்றாக ஸ்பின் ஆகும் வகையில் மாற்றுமாறு ராகுல் டிராவிட் கூறினார். இதனையடுத்து பிட்ச்-ஐ மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

Story first published: Wednesday, February 8, 2023, 8:28 [IST]
Other articles published on Feb 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+