Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-க்கு முன் ஏற்படவுள்ள அதிசயம்.. விராட் கோலியே அதனை செய்வார்..கவாஸ்கர் கருத்தால் ரசிகர்கள் குஷி

திருவனந்தபுரம்: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் போட்டிக்கு பிறகு சச்சினின் வரலாற்று சாதனை ஒன்றை விராட் கோலி முறியடிப்பாரா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. இதற்கு கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரை இந்திய அணி 3 - 0 என முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி ஒயிட் வாஷ் செய்தது.

குறிப்பாக 3வது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு சாதனை படைத்தனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது விராட் கோலியின் சதம் தான். இதே தொடரில் 2வது சதம் இதுவாகும்.

கோலியின் இன்னிங்ஸ்

கோலியின் இன்னிங்ஸ்

80 சர்வதேச இன்னிங்ஸ் மற்றும் 1028 நாட்களாக ஒரு சதத்தை கூட அடிக்காமல் தவித்து வந்த விராட் கோலி ஆஃப்கானுக்கு எதிரான ஆட்டம் முதல் மெகா கம்பேக் தந்துள்ளார். கடந்த 22 இன்னிங்ஸ்களில் 4 சதங்களை அடித்துள்ளார். அதுவும் கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களை அடித்துவிட்டார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் மெகா சாதனைக்கு அருகில் அவர் சென்றுவிட்டார்.

என்ன சாதனை

என்ன சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 46 சதங்களை அடித்துள்ளார். இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை அடித்திருந்தார். எனவே இன்னும் 3 சதங்களை அடித்துவிட்டால், சச்சினையே சமன் செய்துவிடலாம். ஆனால் இது நடக்குமா? எப்போது நடக்கும்? என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

 கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசியுள்ளார். அதில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்துடன் 3 ஒருநாள் போட்டிகளும், ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளும் உள்ளது. இவை இரண்டுமே ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே வருகின்றன. விராட் கோலி தற்போது இருக்கும் ஃபார்முக்கும், அவர் விளையாடுவதையும் பார்த்தால் நிச்சயம் ஐபிஎல்-க்கு முன்பாகவே சச்சினை முந்திவிடுவார் என நினைக்கிறேன்.

நம்பலாமே

நம்பலாமே

4 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை அடித்துள்ள விராட் கோலி, அடுத்துள்ள 6 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை அசால்ட்டாக அடிப்பார் என ஏன் நாம் நம்பக்கூடாது. அவர் நிச்சயம் செய்வார் என சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். 3 வடிவ கிரிக்கெட்டையும் எடுத்துக்கொண்டால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதுவரை விராட் கோலி 74 சதங்களை அடித்துள்ளார். இன்னும் 26 சதங்களை அடித்து சச்சினை முந்துவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்

Story first published: Monday, January 16, 2023, 14:06 [IST]
Other articles published on Jan 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+