Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தின் பேஸ்பால் எல்லாம் சும்மா.. பலமான ஆஸி பவுலிங் எதிராக வேலைக்கே ஆகாது.. கவாஸ்கர் கிண்டல்

லீட்ஸ் : உலக கிரிக்கெட்டில் பேஸ் பால் என்ற ஸ்டைல் மிகவும் பிரபலமானது. இதற்கு காரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல் அதிரடியாக விளையாடும் இந்த ஸ்டைல் இங்கிலாந்து மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இது பேஸ் பால் திட்டம் இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது இந்த பேஸ் பால் திட்டத்தால் இங்கிலாந்தின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

Sunil gavaskar trolls England bazball style wont work against australia

இதற்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேஸ்பால் என்பதை மறந்து விடுங்கள். தரம் குறைந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உடைய அணிக்கு எதிராகத்தான் இந்த திட்டம் செயல்படும். இதுவே ஆஸ்திரேலியா போன்ற டாப் கிளாஸ் வேகப்பந்துவீச்சாளர்களுடைய அணிக்கு எதிராக இது வேலை செய்யாது.

டாப் கிளாஸ் வேகப் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் பழைய முறையான நிதானமாக விளையாடுவது தான் ஒரே வழி. டி20 ஷாட் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேலை செய்யாது. இங்கிலாந்து வீரர்களின் செயல்பாடை பார்த்து ஆஸ்திரேலிய வேகபந்துவீச்சாளர்கள் ஆச்சரியம் தான் அடைந்திருக்கிறார்கள். இங்கிலாந்து வீரர்கள் இப்படி விளையாடுவது தங்களுக்கு எதிராக எடுபடாது என்பதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் உடனடியாக உணர்ந்து கொண்டார்கள்.

அதற்கு தகுந்தாற்போல் தான் அவர்களும் செயல்பட்டார்கள். இங்கிலாந்து வீரர்கள் விளையாடும் முறை நமக்கு விக்கெட்டை கொடுக்கும் என்பதை உணர்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள் விரித்த வலையில் இங்கிலாந்து வீரர்கள் சிக்கினார்கள். இதற்கு முன்பு இந்த திட்டம் செயல்பட்டு இருக்கலாம். ஆனால் ஆஸி பந்துவீச்சுக்கு எதிராக எல்லாம் அது செயல்படாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார். 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவினால் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பபிடத்தக்கது.

Story first published: Sunday, July 9, 2023, 16:19 [IST]
Other articles published on Jul 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+