அது ஒரு மெல்லியக் கோடு.. இந்தப் பக்கம் வந்தா பிழைச்சுக்கலாம் - ரிஷப்க்கு கவாஸ்கர் அட்வைஸ்
சென்னை: ரிஷப் பண்ட் இன்னும் தன்னை மேம்படுத்திக் கொண்டு நிலையாக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்ணில் வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு ஒரு காட்டு காட்டிவிட்டது ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி. ஏதோ, இந்திய அணி பிரிட்டன் சென்று தடுமாறுவது போல உள்ளது கடந்த நான்கு நாட்களாக அரங்கேறி வரும் காட்சிகள்.
இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் சாவகாசமாக 578 ரன்களை குவித்ததை பார்த்த போது, இந்தியாவும் நன்றாக பேட் செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

கரைசேர்த்த ரிஷப்
ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது, ரிஷப் பண்ட் அதிரடியாக 88 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்தார். அவரைத் தவிர்த்து வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 337 எனும் ஓரளவுக்கு டீசண்ட்டான ஸ்கோரை எட்டியது.

கன்சிஸ்டன்சி வேண்டும்
இந்நிலையில், ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "பண்ட் எப்போதும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வீரராக திகழ்கிறார். தனது அபாரமான ஆட்டத்தால் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் ரிஷப், தொடர்ந்து நிலையாக ஆட வேண்டும் என்று விரும்புகிறோம்.

மெல்லிய கோடு
ஆனால், ரிஷப் நம்மை எரிச்சல் அடைய வைக்கிறார். பயமில்லாமல் விளையாடுவதற்கும், கவனக்குறைவாக விளையாடுவதற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது என்பதை ரிஷப் பண்ட் புரிந்து கொள்ள வேண்டும்.

தெளிந்தால் போதும்
பயமில்லாததற்கும், கவனக்குறைவிற்கும் இடையில் உள்ள கோட்டை உணர்ந்து கொண்டாலே, அவர் அதிக நேரம் களத்தில் நின்று விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார். கவனிப்பாரா ரிஷப்?


Click it and Unblock the Notifications