Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டத்தின் யுத்திகளை மாற்றுங்கள்.. இல்லையெனில் ஆபத்து! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

பிரிஸ்பேன் : டி20 உலக கோப்பையில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களுடைய ஆட்ட யுக்திகளை மாற்ற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிகாரப்பூர்வமான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை போராடி வீழ்த்தியது.

கவனம் தேவை

கவனம் தேவை

இதில் இந்திய அணி வீரர்கள் 10, 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டதால் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து பேசிய கவாஸ்கர், ஆஸ்திரேலிய மைதானம் மிகவும் பெரியது. இங்கே சிக்சர் அடிப்பதில் கவனம் தேவை. பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்வது பவுண்டரி எல்லைக்கோட்டில் அருகே கேட்ச் ஆகி இருக்கிறார்கள்.

கேட்சாக மாற வாய்ப்பு

கேட்சாக மாற வாய்ப்பு

ஆனால் இதே ஷாட்கள் எல்லாம் இந்தியாவில் சிக்ஸராக மாறி இருக்கும். ஆஸ்திரேலிய மைதானம் மிகவும் பெரியது என்பதால் சிக்ஸருக்கு செல்ல வேண்டிய பந்துகள் கேட்சாக மாறிவிட்டது. இதனால் இந்திய வீரர்கள் இனி கவனமாக விளையாட வேண்டும். மைதானத்தில் பெரிய பகுதியில் பேட்ஸ்மேன்கள் தூக்கி அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.மைதானத்தில் சிறிய பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சிக்ஸர் அடிக்க முயற்சி செய்யலாம்.

ரன் ஓடி எடுங்கள்

ரன் ஓடி எடுங்கள்

இல்லையெனில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து விக்கெட்டுகளை இழக்க நேரிடும். இந்திய அணி வீரர்கள் சிக்சர் அடிக்க முயற்சி செய்வதற்கு பதிலாக ஃபில்டர்களுக்கு இடையில் உள்ள கேப்பை பயன்படுத்திக்கொண்டு பவுண்டர்கள் அடிக்கலாம். ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் ஓடி ஓடி ரன்களை எடுப்பது மிகவும் அவசியம். இரண்டு ரன்கள், 3 ரன்கள் என அதிகமாக ஓடினால் ஸ்கோர் உயரும். மோசமான பந்தை மட்டும் அடித்து ஆட வேண்டும்.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகம்

பந்துவீச்சாளர்களுக்கு சாதகம்

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இது குறித்து ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும் முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன் என்று கவாஸ்கர் கூறினார். இதேபோன்று மைதானத்தின் பவுண்டரி லைன்கள் அதிக தூரத்தில் இருப்பது பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகத்தை கொடுக்கும் அப்போதுதான் டி20 போட்டி பரபரப்பாக இருக்கும்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் அடித்த பந்து சிக்ஸர் லைனில் கேட்ச் ஆனபோது கவாஸ்கர் இவ்வாறு கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 18, 2022, 17:12 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+