இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை... எல்லை மீறிய விமர்சனங்கள்... பொங்கி எழுந்த கவாஸ்கர்
அகமதாபாத்: 3வது டெஸ்டில் பிட்ச் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அனைத்து விமர்சனங்களுக்கும் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் விமர்சனங்களை கூறலாம் ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என சுனில் கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

பிட்ச் குற்றச்சாட்டு
அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. இப்போட்டியில் ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். இதனால் இந்திய அணிக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்யப்பட்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஐசிசி மீதே குற்றச்சாட்டு
இது குறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், இந்தியா போன்ற பலமான நாடுகளை கேள்வி கேட்க பல் இல்லாத அமைப்பாக ஐசிசி செயல்படுகிறது. இந்தியா அவர்களுக்கு ஏற்றார் போல் எப்படிப்பட்ட பிட்சையும் தயார் செய்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் கெடுகிறது என தெரிவித்துள்ளார்.

கவாஸ்கர் காட்டம்
இது குறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்த உலகில் அனைவரும் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால் ஒரு சில எல்லை மீறிய விமர்சனங்கள் தெரிவிப்பது சரியான பண்பாடு அல்ல. சில விமர்சனங்களை எடுத்துக்கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

பிட்ச் மோசமில்லை
உண்மையை கூற வேண்டும் என்றால் பிட்ச் நன்றாக பவுன்ஸ் ஆனதுதான். ஸ்பின்னருக்கு உதவியது உண்மைதான். ஆனால் ஒரு பேட்ஸ்மேன் பந்து எப்படி வந்தாலும் கையாள வேண்டும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ரன் அடிக்க வேண்டும் என்ற புத்துணர்வான மனநிலை அப்போது இல்லை என நினைக்கிறேன்" என கவாஸ்கர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications