Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asian Games: கிரேக்க ரோமன் மல்யுத்தத்தில் வரலாற்று சாதனை.. 2வது முறையாக வெண்கலம் வென்ற சுனில் குமார்

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரேக்க ரோமன் மல்யுத்தம் 87 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரேக்க ரோமன் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

நகோயா சிட்டி ஸ்போர்ட்ஸ் மையத்தில் நடைபெற்ற ஆடவர் கிரேக்க ரோமன் மல்யுத்தம் 87 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில், இந்தியாவின் 27 வயதான நட்சத்திர மல்யுத்த வீரர் சுனில் குமார், பிலிப்பைன்ஸ் நாட்டின் காலம் ஜான்ஸ்டன் ராபர்ட்ஸை எதிர்கொண்டார்.

Sunil Kumar Wins Bronze Medal in Greco-Roman Wrestling at Asian Games 2026

ஆட்டம் தொடங்கிய ஒன்றரை நிமிடங்களிலேயே எதிராளியை புரட்டிப் போட்டு 5-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சுனில் குமார், முதல் சுற்றிலேயே 9-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று 'டெக்னிக்கல் சுபீரியாரிட்டி' முறையில் எதிராளியை வீழ்த்தினார். பிலிப்பைன்ஸ் வீரருக்கு எந்தவித வாய்ப்பும் தராமல் வெறும் 3 நிமிடங்கள் மீதமிருக்கும் போதே போட்டியை ஒருதலைப்பட்சமாக முடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

கிரேக்க ரோமன் மல்யுத்தத்தில் இரட்டைப் பதக்க சாதனை

முன்னதாக அரையிறுதிக்கு முந்தைய சுற்றில் தஜிகிஸ்தான் வீரர் முகமது சுல்தான்சோதாவை வீழ்த்திய சுனில் குமார், அரையிறுதியில் ஜப்பான் வீரர் தைசோ யோஷிடாவிடம் 0-11 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அதிரடி காட்டி பதக்கத்தை உறுதி செய்தார்.

IND vs WI: ODI என்பதை மறந்து 18 ஓவரில் அடித்து முடித்த கேம்ப்பெல்.. வேடிக்கை பார்த்த இந்திய அணி

IND vs WI: ODI என்பதை மறந்து 18 ஓவரில் அடித்து முடித்த கேம்ப்பெல்.. வேடிக்கை பார்த்த இந்திய அணி

கடந்த 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 87 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றிருந்த சுனில் குமார், தற்போது 2026 ஆசிய போட்டியிலும் மீண்டும் வெண்கலம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் கிரேக்க ரோமன் மல்யுத்தத்தில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து, இந்திய மல்யுத்த உலகிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Story first published: Wednesday, September 30, 2026, 15:54 [IST]
Other articles published on Sep 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+