Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஓவரில் 21 டாட் பால், 3 விக்கெட்.. கதறவிட்ட சுனில் நரைன்.. சிபிஎல் தொடரில் புதிய சாதனை

பார்படோஸ்: வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 2026 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் தனது அசத்தல் பந்துவீச்சால் புதிய சாதனை படைத்துள்ளார். சென்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் மிகக் கட்டுக்கோப்பாக பந்துவீசி எதிரணி பேட்டர்களை ரன் அடிக்க விடாமல் திணறடித்தார்.

அவர் தனது 4 ஓவர் பந்துவீச்சில் ஒரு மெய்டன் ஓவர் உள்பட வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் அவரது தனிப்பட்ட சிறந்த பந்துவீச்சு சாதனையாக பதிவானது. 4 ஓவரில் விக்கெட் வீழ்த்தியதோடு, அந்த 24 பந்துகளில் 21 பந்துகளை டாட் பாலாக வீசி மிரள வைத்தார்.

Sunil Narine bowled 21 dot balls in 4 overs and took 3 wickets in CPL 2026 against St Kitts amp amp Nevis Patriots

நரைனின் சிறப்பான பந்துவீச்சால் சென்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கெவின் விகாம் 38 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 21 ரன்களும், அகமத் நெட் 18 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். டிரின்பாகோ அணி சார்பில் டெரன்ஸ் ஹைண்ட்ஸ் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், டொமினிக் டிரேக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டது. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி டிரின்பாகோ அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு உண்மையாகவே 15 வயது தான் ஆகுதா? வயதை வைத்து சர்ச்சை.. பிரெட் லீ நெத்தியடி பதில்

வைபவ் சூர்யவன்ஷிக்கு உண்மையாகவே 15 வயது தான் ஆகுதா? வயதை வைத்து சர்ச்சை.. பிரெட் லீ நெத்தியடி பதில்

அந்த அணியில் மேத்யூ பிரிட்ஸ்கே 35 பந்துகளில் 35 ரன்களும், ஜோஷுவா டா சில்வா 18 ரன்களும், காலின் முன்ரோ 17 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுனில் நரைனின் இந்த 21 டாட் பால் பந்துவீச்சு உலக அளவில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Story first published: Sunday, August 9, 2026, 13:36 [IST]
Other articles published on Aug 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+