ஐபிஎல் தொடர்களின் அசத்தல் ஆட்ட நாயகன் யார் தெரியுமா? கங்குலி சொல்றதை கேளுங்க..
கொல்கத்தா: ஐபிஎல் தொடர்களின் ஆட்ட நாயகன் என்றால் அது சுனில் நரைன்தான் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். நடப்பாண்டின், ஐபிஎல் போட்டித் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், கங்குலி கூறியதாவது:
ஐபிஎல் தொடரை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருவதற்கான முழு பெருமையும் பிசிசிஐக்குதான் போய் சேர வேண்டும்.

பிசிசிஐ உழைப்பு
ஒரு தொடரை ஆரம்பிப்பதைவிட, அதை தொடர்ச்சியாக வெற்றிகரமாக நடத்துவதுதான் கஷ்டமானது. அதற்கு பிசிசிஐ கடுமையான உழைப்பு காரணம். ஐபிஎல் தொடர், இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அது பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது.

கொல்கத்தா ஃபேவரைட்
நடப்பு சீசனில் கோப்பையை வெல்ல தகுதியுடைய அணிகள் என்று சில அணிகளை நான் தேர்வு செய்துள்ளேன். ஆனால், எப்போதுமே எனது விருப்ப அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்தான். அந்த அணிக்காக இரு வருடங்கள் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளதால், கொல்கத்தா மீது அதீத அன்பு உண்டு.

கவனிக்க வேண்டிய வீரர்கள்
கொல்கத்தா அணியின் சுனில் நரைன், பஞ்சாப்பின் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், சேவாக் ஆகியோர் நடப்பு சீசனில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
அதிலும், சுனில் நரைன் கடந்த மூன்று சீசன்களாக கலக்கி வருகிறார். ஐபிஎல் தொடர்களின் ஆட்ட நாயகன் என்றால் அது நரைன்தான்.

உற்சாக ஐபிஎல்
47 போட்டிகளில் 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் நரைன். கடந்த இரு சீசன்களாகவே, அனைத்து அணிகளும் சமபலத்துடன் காணப்படுகின்றன. இதுதான், ஐபிஎல் தொடரை மிகவும் உற்சாகமாக வைத்திருக்க காரணம். இவ்வாறு கங்குலி கூறினார்.


Click it and Unblock the Notifications