Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடா… என்ன ஒற்றுமை.. ஒரே ஓவரில் சாதனை படைத்த சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி

Recommended Video

ஒரே ஓவரில் சாதனை படைத்த சுனில் நரைன், வருண்- வீடியோ

கொல்கத்தா:பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் வருணின் ஒரே ஓவரில் 25 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் சுனில் நரைன்.

கொல்கத்தாவில் ஐபிஎல் லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டி நடைபெற்றமு. மன்கட் சர்ச்சை பஞ்சாப் அணி, கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில், பீல்டிங் தேர்வு செய்தார்.

கொல்கத்தா அணியில் தனது 100வது ஐபிஎல் போட்டியில் துவக்க வீரராக சுனில் நரைன் களமிறங்கினார். அவரது வாழ்க்கையில் இந்த போட்டி மறக்க முடியாத போட்டியாகும். அவருக்கு மட்டுமல்ல.. வருண் சக்கரவர்த்திக்கும் என்றும் சொல்லலாம்.

ஒரே ஓவரில் 25 ரன்கள்

ஒரே ஓவரில் 25 ரன்கள்

ஆட்டத்தில் சுனில் நரைன் மரண காட்டு காட்டினார் என்றே சொல்லலாம். பஞ்சாப் வீரர் வீசிய வருண் சக்கரவர்த்தி வீசிய 2வது ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 25 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த ஆண்டு ஐபிஎல்., தொடரில் ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

ஸ்டிரைக் ரேட்

ஸ்டிரைக் ரேட்

அதுதவிர மேலும் பல புதிய சாதனைகளை அவர் செய்திருக்கிறார். சுழற்பந்து வீச்சில் அவர் வைத்திருக்கும் சாதனைகளும் யாரும் அறியாதது. ஐபிஎல் தொடரில் ஸ்பின் பந்துவீச்சில் அவர் வைத்திருக்கும் ஸ்டிரைக் ரேட் 225.5.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

இதுவரை எந்த வீரரும் ஐபிஎல் தொடரில் வைத்திருக்காத ஸ்டிரைக் ரேட்டாகும். அவருக்கு அடுத்தபடியாக மேக்ஸ்வெல் உள்ளார். அவர் வைத்திருக்கும் ரன் ரேட் 171.6 ஆகும்.3வது இடத்தில் பாண்டியா இருக்கிறார். அவர் 170.9 ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார்.

வருணுக்கு ரூ.8.4 கோடி

வருணுக்கு ரூ.8.4 கோடி

அதேபோல ஐபிஎல் தொடரில் தமது முதல் போட்டியில் பங்கேற்ற வருண் சக்கரவர்த்தியும் இந்த போட்டியை மறக்க மாட்டார். ரூ.8.4 கோடிக்கு வாங்கப்பட்ட வீரர் அவர். ஐபிஎல் தொடரில் தாம் வீசிய முதல் ஓவரில் 25 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அறிமுக பந்துவீச்சாளர் ஒருவர் முதல் ஓவரில் இதுபோன்ற ரன்களை இதற்கு முன்பாக யாரும் விட்டுக் கொடுத்தது இல்லை.

Story first published: Thursday, March 28, 2019, 0:14 [IST]
Other articles published on Mar 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+