Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SRH vs RCB:வில்லியம்சன் இல்லாமல் களமிறங்கிய சன் ரைசர்ஸ்... பெங்களூர் அணியில் நவ்தீப் சேர்ப்பு

Recommended Video

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

ஹைதராபாத்:பெங்களூக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 56 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந் நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

Sunrisers Hyderabad captain Williamson injured and replaced by Bhuvanesh Kumar

இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியில் இருந்து கேன் வில்லியம்சனிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அந்த அணியின் துணை கேப்டனான புவனேஷ்வர் குமாரே இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை வழிநடத்துவார்.

அதே போல் ஹைதராபாத் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. கேன் வில்லியம்சனிற்கு பதிலாக முகமது நபி சேர்க்கப்பட்டுள்ளார். சபாஷ் நதீமிற்கு பதிலாக தீபக் ஹூடா ஹைதராபாத் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதே போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நவ்தீப் சைனி நீக்கபட்டு அவருக்கு பதிலாக பிரயாஸ் பர்மன் என்னும் இளம் வீரர் அறிமுக வீரராக களமிறங்கி உள்ளார். இது தவிர வழக்கம் போல் டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி, ஹெய்ட்மர், பார்த்தீவ் பட்டேல் போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர் .

Story first published: Sunday, March 31, 2019, 16:16 [IST]
Other articles published on Mar 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+