Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை பந்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்.. ஆனால் புள்ளி பட்டியலை பாருங்க

ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றின் முக்கிய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வெற்றியைப் பதிவு செய்தது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்தாக அமைந்தது.

போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, பெங்களூரு அணிக்கு 256 ரன்கள் என்ற ஒரு பெரிய இலக்கைக் கொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி, வெறும் 4 ஓவர்களில் 45 ரன்கள் குவித்து அதிரடி துவக்கத்தை அளித்தனர். ஹெட் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ரஷீக் சலாம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர், அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடினார். இவர் இஷான் கிஷனுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த நிலையில், சியாஷ் சர்மா பந்துவீச்சில் வீழ்ந்தார். இஷான் கிஷன் மற்றும் ஹென்ரிச் கிளாசன் கூட்டணி நடு ஓவர்களில் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, 113 ரன்கள் partnership அமைத்து, இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.

கிளாசன் 24 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில், க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நித்திஷ் குமார் ரெட்டி வெறும் 12 பந்துகளில் 29 ரன்கள் விளாசி explosive cameo கொடுத்தார். இதன்மூலம், சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்து, வலுவான ஸ்கோரை எட்டியது.

256 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் உதவியுடன் ஒரு தீவிர துவக்கத்தைக் கொடுத்தது. ஐயர் 44 ரன்கள் குவித்து முன்னிலை வகித்த நிலையில், கோலியுடன் 60 ரன்கள் partnership அமைத்தார். எனினும், ஐயர் 44 ரன்களில் இஷான் மலிங்கா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் விராட் கோலி 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், ஷகிப் ஹுசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 14 பந்துகளில் 21 ரன்கள் பங்களித்தார். ரஜத் பட்டிதார் (56 ரன்கள், 39 பந்துகள்) மற்றும் க்ருனால் பாண்டியா (41 ரன்கள்) இணைந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை நிலைப்படுத்தினர். ஆனால், பட்டிதார் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததும், பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்தது.

டிம் டேவிட் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தபோதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 200 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில், 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் விளாசிய இஷான் கிஷன், ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார். அவரது அதிரடியான ஆட்டம், சன்ரைசர்ஸ் அணி ஸ்கோர் எடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.

வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ், "இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியது மிகவும் சிறப்பாக இருந்தது. சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமைகளை வெளிப்படுத்தினோம். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு வர நாங்கள் கடுமையாகப் போராடினோம், ஆனால் அது சாத்தியமாகவில்லை. இது ஒரு பெரிய வெற்றிதான்," என்று கூறினார்.

கம்மின்ஸ் மேலும், "எங்கள் பந்துவீச்சு தாக்குதல் பாராட்டத்தக்கது. மலிங்கா மற்றும் ஷகிப் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பது ஒரு கேப்டனின் கனவாகும். அவர்களிடமிருந்து நானும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்," என்று தனது பந்துவீச்சாளர்களைப் பாராட்டினார்.

Story first published: Friday, May 22, 2026, 23:59 [IST]
Other articles published on May 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+