Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னருக்கு வந்த அதே நிலை.. ஐதராபாத் அணியில் அதிரடி மாற்றங்கள்.. தக்கவைக்கப்போகும் வீரர்கள் இதோ!

மும்பை: டேவிட் வார்னருக்கு நடந்த அதே கொடுமையான சம்பவம் இன்று ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023ம் ஆண்டுக்கான பணிகள் தற்போது இருந்தே சூடுபிடித்துள்ளன. இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் இன்றைக்குள் ( நவம்பர் 15) தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

ஐதராபாத் அணி பட்டியல்

ஐதராபாத் அணி பட்டியல்

இன்று மாலை 5 மணிக்கு அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்போகும் வீரர்கள் மற்றும் வெளியேற்றப்போகும் வீரர்களை வெளியிடுகின்றன. அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பட்டியல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்லாத அந்த அணி இந்த முறை அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

கேப்டன் நீக்கம்

கேப்டன் நீக்கம்

ஐதராபாத் அணி மோசமாக சொதப்பியதால் தான் டேவிட் வார்னர் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அதே போலவே தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சனும் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இவரின் கேப்டன்சிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றாலும் பேட்டிங்கில் சொதப்பியிருந்தார். கடந்த சீசனில் வெறும் 216 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். சராசரி வெறும் 19.64 ரன்கள் மட்டுமே ஆகும். இவர் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 4 பேர்

மேலும் 4 பேர்

வில்லியம்சனை போலவே மேலும் 4 வீரர்களை நீக்கியுள்ளனர். அதிரடி ஆட்டக்காரர்களான நிகோலஸ் பூரண் மற்றும் ரொமாரியோ ஷெபேர்ட் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.. சீன் அப்போட் மற்றும் இந்திய வீரர் கார்த்திக் தியாகி ஆகியோரும் ஏலத்திற்காக விடப்பட்டுள்ளனர்.

தக்கவைப்போர் பட்டியல்

தக்கவைப்போர் பட்டியல்

எய்டன் மர்க்ரம், அப்துல் சமாத், ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், ஜகதீசா சுசித், டி.நடராஜன், உம்ரான் மாலிக்

Story first published: Tuesday, November 15, 2022, 13:50 [IST]
Other articles published on Nov 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+