Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனான இஷான் கிஷன்.. பாட் கம்மின்ஸ் என்ன ஆனார்?

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்படவுள்ளது.

பாட் கம்மின்ஸ் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை. இந்த நெருக்கடியான நிலையில், ஐதராபாத் அணியை வழிநடத்த 27 வயதான இஷான் கிஷன் சரியான தேர்வாக இருப்பார் என அணி நிர்வாகம் கருதுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்க்கண்ட் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி அந்த அணிக்கு முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அந்தத் தொடரில் 197.33 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிகபட்சமாக 517 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

Sunrisers Hyderabad SRH Names Ishan Kishan as Captain for Early IPL 2026 Matches

கடந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் இஷான் கிஷன் மீது இருந்தது. ஆனால் அதனை தனது சமீபத்திய அதிரடி ஃபார்ம் மூலம் சுக்குநூறாக்கியுள்ளார். உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். தொடர்ந்து நியூசிலாந்து தொடர் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக்கோப்பையில் 193 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 317 ரன்கள் குவித்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.

மேலும், 3 வது வரிசையில் களமிறங்கி அவர் அதிரடியாக விளையாடுவதால், ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் பேட்டிங் வரிசைக்கு எந்த சிக்கலும் இருக்காது. கேப்டன் பதவிக்கு அபிஷேக் சர்மாவின் பெயரும் பரிசீலனையில் இருந்தாலும், கேப்டன்சி அனுபவத்தில் இஷான் கிஷன் முன்னிலையில் இருப்பதால் அவருக்கே பதவி அளிக்கப்படும். மேலும், இஷான் கிஷன் தற்காலிக கேப்டனாக மட்டுமே நியமிக்கப்பட உள்ளார். பாட் கம்மின்ஸ் அணிக்கு திரும்பிய பின் அவரே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என கூறப்படுகிறது.

Story first published: Monday, March 16, 2026, 22:39 [IST]
Other articles published on Mar 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+