Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த சவால்ல அவங்க வெற்றி பெறுவாங்க... சன்ரைசர்ஸ் பத்தி ஆரூடம் சொல்லும் பிரையன் லாரா

ஷார்ஜா : சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்றைய இறுதி லீக் போட்டியில் மோதவுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றால் பிளே-ஆப்பிற்கு தகுதி பெறும்.

இந்நிலையில் சமீப போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த சவாலிலும் வெற்றி பெறும் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

வெற்றி கட்டாயத்தில் சன்ரைசர்ஸ்

வெற்றி கட்டாயத்தில் சன்ரைசர்ஸ்

இன்றைய கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறும்.

பிரையன் லாரா நம்பிக்கை

பிரையன் லாரா நம்பிக்கை

இந்நிலையில், சமீப போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றுவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

4 இடங்களில் இடம்பெற வெற்றி கட்டாயம்

4 இடங்களில் இடம்பெற வெற்றி கட்டாயம்

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொள்ளும் அனைத்து திறனும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணிக்கு உள்ளதாக லாரா குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் இடம்பெற சன்ரைசர்ஸ் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டி காட்டினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு உள்ளது

சன்ரைசர்ஸ் அணிக்கு உள்ளது

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் சன்ரைசர்ஸ் வெற்றி கொள்வதற்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் லாரா தெரிவித்துள்ளார். இந்த இறுதி லீக் போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் அந்த அணிக்கு உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, November 3, 2020, 20:28 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+