For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எஸ்ஆர்எச் -சிஎஸ்கே மோதும் பரபர போட்டி.. வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அணிகள்

துபாய்: ஐபிஎல்லின் 29வது போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவுள்ளன.

ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 5வது இடத்திலும் சிஎஸ்கே 7 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 7வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் -சிஎஸ்கே மோதல்

சன்ரைசர்ஸ் -சிஎஸ்கே மோதல்

ஐபிஎல்லின் 13வது சீசன் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 29வது போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் மாலை நடைபெறவுள்ள நிலையில், இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவுள்ளன. இந்த அணிகள் ஏற்கனவே மோதிய நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் 3ல் வெற்றி

சன்ரைசர்ஸ் 3ல் வெற்றி

ஐபிஎல்லின் இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களது சிறப்பான ஆட்டங்களை தர தவறியுள்ளன. இதுவரை இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், சிஎஸ்கே 5 போட்டிகளில் தோல்வியுற்று ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்திலும் சன்ரைசர்ஸ் 3ல் வெற்றி பெற்று 5வது இடத்திலும் உள்ளன.

7 போட்டிகளில் 113 ரன்கள்

7 போட்டிகளில் 113 ரன்கள்

வழக்கமாக பரபரப்பான ஆட்டங்களை ரசிகர்களுக்கு பரிசளித்து பழக்கப்பட்ட சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 113 ரன்களை மட்டுமே எடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார். கேப்டனாக தான் எடுக்கும் முடிவுகள் தவறானவை என்றும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

அடுத்த கட்டத்திற்கு நகரும் முனைப்பு

அடுத்த கட்டத்திற்கு நகரும் முனைப்பு

இந்நிலையில் சன்ரைசர்ஸ் மற்றும் சிஎஸ்கே இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி வாழ்வா சாவா போராட்டம் போன்றது தான். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்ற கட்டாயம் இரு அணிகளுக்கும் உள்ளது.

150 விக்கெட்டுகள் சாதனை

150 விக்கெட்டுகள் சாதனை

ஆயினும் இத்தகைய நெருக்கடியிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை பூர்த்தி செய்ய 19 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதேபோல சிஎஸ்கே கேப்டன் தோனி ஐபிஎல்லில் தனது 150 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய 1 விக்கெட் மட்டுமே தேவையாக உள்ளது.

Story first published: Tuesday, October 13, 2020, 21:04 [IST]
Other articles published on Oct 13, 2020
English summary
Dhoni is one dismissal away from reaching 150 IPL dismissals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+