Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப 5வது இடத்துக்கு முன்னேறியிருக்கோம்... முதலிடத்துக்கும் வருவோம்... நம்பிக்கை சன்ரைசர்ஸ்

துபாய் : நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வியுற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலிடத்திலும் காகிசோ ரபடா முதலிடத்திலும் உள்ளனர்.

சன்ரைசர்ஸ் 5வது இடம்

சன்ரைசர்ஸ் 5வது இடம்

நேற்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

8 புள்ளிகளுடன் 7வது இடம்

8 புள்ளிகளுடன் 7வது இடம்

இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 புள்ளிகளை மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்றுள்ளது. அந்த அணி முதல் 4 இடங்களில் இடம் பெற வேண்டுமானால் அடுத்து விளையாடவுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

6வது இடத்தில் பஞ்சாப் அணி

6வது இடத்தில் பஞ்சாப் அணி

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 8 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் சன்ரைசர்ஸ் அணியைவிட புள்ளிகள் அடிப்படையில் 6வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

காகிசோ ரபடா முதலிடம்

காகிசோ ரபடா முதலிடம்

இதனிடையே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரை ஷிகர் தவான் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் பின்தொடர்கின்றனர். இதேபோல 10 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளுடன் காகிசோ ரபடா முதலிடத்தில் உள்ளார். அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முகமது ஷமி 16 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறார்.

Story first published: Friday, October 23, 2020, 12:48 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+