Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏலே நீ ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சிட்டல.. ஐபிஎல் ஏலத்தில் 3 பெருந்தலைகளுக்கு குறி..ஐதராபாத் மாஸ்டர் ப்ளான்

மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்திற்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 மிகப்பெரும் வீரர்களை குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. மேலும் எந்தெந்த வீரர்களை வாங்குவது என கடைசி கட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

ஐதராபாத் அணி வியூகம்

ஐதராபாத் அணி வியூகம்

இந்த ஏலத்தில் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தான். இருப்பதிலேயே அதிக தொகையை வைத்துள்ள அணியாக ரூ. 42.2 கோடியை ஐதராபாத் அணி தான் வைத்துள்ளது. இதற்காக கேப்டன் கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரண் போன்ற பெரிய வீரர்களை அணியில் இருந்து கழட்டிவிட்டு, பணத்தை மிச்சப்படுத்தி வைத்துள்ளது.

அட்டகாச ப்ளான்

அட்டகாச ப்ளான்

இந்நிலையில் இந்த பணத்தை கொண்டு 3 பெரும் வீரர்களுக்கு அந்த அணி குறிவைத்துள்ளது. அதாவது வேகப்பந்துவீச்சில் கலக்க வேண்டும், இதே போல பேட்டிங்கிலும் அதிரடி காட்டும் ஆல்ரவுண்டராக இருக்கும் வகையில் வீரர்களை தேர்வு செய்யவுள்ளது. இதற்காக பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், கேமரூன் கிரீன் என மூன்று தரமான வீரர்களை குறித்து வைத்துள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ் அட்டகாசமான ஃபார்மில் இருந்து போட்டியை முடித்துக்கொடுத்தார். மற்றொரு இங்கிலாந்து வீரரான சாம் கரணும் அதே டி20 உலகக்கோப்பை தொடரில் அபார பவுலிங்கை வெளிப்படுத்தியவர். இவர் லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு உதவுவார். இதே போல ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீனும் தரமான ஃபார்மில் இருக்கிறார். இவர்களுக்காக மற்ற அணிகள் போட்டிப்போட்டாலும், அதிக செலவு செய்ய பணம் இல்லை. ஆனால் ஐதராபாத் வைத்துள்ளது.

 அசுர பலம்

அசுர பலம்

ஐதராபாத்தின் பேட்டிங் ஆர்டரில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மர்க்ரம், வாஷிடங்டன் சுந்தர் என மிடில் ஆர்டர் வரை சிறப்பாக உள்ளது. ஃபினிஷராக அப்துல் சமாத் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் லோயர் ஆர்டரில் ஆடும் ஆல்ரவுண்டர் தான் இல்லை. எனவே மேற்கூறிய 3 பேரில் யாரேனும் ஒருவர் கிடைத்தால் கூட ஐதராபாத் அணிக்கு அசுர பலம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 14, 2022, 20:56 [IST]
Other articles published on Dec 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+