சென்னை ரசிகர்களே, உங்கள் பொன்னான ஆதரவை புனே அணிக்கு தாருங்கள்: அஸ்வின் வீடியோ வேண்டுகோள்
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து வருடம் தோறும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 9வது ஐபிஎல் போட்டி நாளை முதல் மே மாதம் 29ம் தேதி வரை நடக்கிறது.
சூதாட்டப் புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஐபிஎல்தொடரில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணி வீரர்களும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள புனே மற்றும் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் புனே அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் சி.எஸ்.கே. வீரர் அஸ்வின் சென்னை ரசிகர்கள் புனே அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புனே சீருடை
அஸ்வின் கூறியதாவது: புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியில் நான் சேர்ந்ததில் இருந்து எனது ரசிகர்கள் புனே அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். புனே அணியின் ஜெர்சியை (சீருடை), சிஎஸ்கே ரசிகர்கள் வாங்கியுள்ளனர்.
சென்னை வீரர்கள்
புனேயோ, சென்னையோ பிரச்சினையில்லை. ஒரு டீமாக இணைந்துள்ளோம். ராஜஸ்தான், சென்னையில் இருந்து பிளேயர்கள் வந்துள்ளனர். சென்னையில் இருந்து 4 வீரர்கள் புனே அணிக்கு வந்துள்ளோம். எனவே, இந்த முறை அப்படியே, உங்கள் சப்போர்ட்டை புனே அணிக்கு மாற்றிவிடுங்கள். இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரசிகர்க் கூட்டம்
சென்னை அணிக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மை மாநில ரசிகர்கள் ஆதரவு உண்டு. பேஸ்புக் ரசிகர்கள் கணக்கெடுப்பில் இது பலமுறை வெளிப்படையாக தெரியவந்த விஷயம்.

வீரர்கள் கோரிக்கை
எனவே சிஎஸ்கே இல்லாத குறையை தீர்க்க ஐபிஎல் நிர்வாகம் இப்படியெல்லாம், வீரர்களை வைத்து சிஎஸ்கே ரசிகர்களை ஈர்க்க முயலுவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications