Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போடு தகிட தகிட.. "வீழ்வேனென்று நினைத்தாயோ.. பார்த்துக்கலாம்.." வெறியேற்றும் சிஎஸ்கே மீம்ஸ்!

சென்னை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும், ருதுராஜ் அதிரடி, ஹங்கர்கேகர் பவுலிங் மற்றும் தோனியின் சிக்சர் என சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட சில விஷயங்கள் கிடைத்துள்ளது. அதனை வைத்து ரசிகர்கள் பட்டாசாக சப்போர்ட் செய்து மீம்ஸ் உருவாக்கி உலவ விட்டுள்ளனர். 16வது ஐபிஎல் சீசன் அகமதாபாத் மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது.

இந்தப் போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தோனி அடுத்த சிக்ஸ் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடுவதற்கு சில விஷயங்கள் கிடைத்துள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட், முதல் சில போட்டிகளில் திணறி பின்னர் ஃபார்முக்கு வருவார். ஆனால் நேற்று நடைபெற்ற முதல் போட்டியிலேயே ஃபார்முக்கு வந்தார்.

Supporting stunning CSK Memes trending on social media after their match against Gujarat in IPL 2023

அதிலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜோஷ் லிட்டில் ஆகியோரின் பந்துவீச்சில் அடித்த சிக்சர் அவர் எந்த ஃபார்மில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் வகையில் இருந்தது. இதனை குறிப்பிட்டு பாய்ஸ் படத்தில் குடிப்பதற்காக "ஹாய் நான் முன்னா.." என்று விவேக்கிடம் பேச முயலும் சித்தார்த்திடம், "இருந்துட்டு போ" என்று விவேக் சொல்வது போல் "ஹாய் நான் குஜராத் அணி, நடப்பு சாம்பியன்" என்று குஜராத் சொல்வதை போலவும், அதற்கு "இருந்துட்டு போ" என்று ருத்துராஜ் சொல்வதை போலவும், வந்த மீம்ஸ் கூஸ்பம்ப்.

Supporting stunning CSK Memes trending on social media after their match against Gujarat in IPL 2023

இதுவரை சென்னை அணி பங்கேற்ற 13 சீசன்களில் இருமுறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவறவிட்டுள்ளது. மீதமுள்ள 11 சீசன்களில் 4 முறை சாம்பியன் மற்றும் 5 முறை இறுதிப்போட்டி என்று சிஎஸ்கே அணியின் ரெக்கார்ட் வேறு எந்த அணிக்கும் ஐபிஎல் தொடரில் இல்லை. அதை குறிப்பிடும் வகையில் புஷ்பா படத்தில் வரும் அல்லு அர்ஜூன் பேசும் "இதுதான் சார் எங்க பிராண்ட்" என்று சொல்லுவது ரசிகர்களிடையே கர்வத்தை கொடுத்து வருகிறது. இதனை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Supporting stunning CSK Memes trending on social media after their match against Gujarat in IPL 2023

நேற்றைய போட்டியில் சென்னை அணிக்காக இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அறிமுகமானார். வேகப்பந்துவீச்சாளரான அவர், முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரன்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், வேகத்தில் கில்லியாக இருந்தார் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். இவரை பாராட்டும் வகையில் சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதி ஆர்யாவுக்காக வாய்ப்பு கேட்கும் போது, "ஆட்டம்னா என்னனு பாப்ப" என்று சொல்வார். அதனை குறிப்பிட்டு சிஎஸ்கே ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது̣.

Supporting stunning CSK Memes trending on social media after their match against Gujarat in IPL 2023

அதேபோல் கடைசி ஓவரில் ஜோஷ் லிட்டில் வீசிய பந்தில் தல தோனி அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். அதில் பாராட்டும் வகையில், அண்ணாமலை படத்தில் மனோரமா பேசும் "எங்க அண்ணாமல இன்னும் மாறல" என்ற வசனத்தை " எங்க தல இன்னும் மாறல" என்று ரசிகர்கள் மீமாக உருவாக்கி உள்ளனர். கடைசி ஓவரில் தோனி சிக்சர் அடிப்பது ஒரு முடிவுபெறாத தொடர்கதையாக வருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Supporting stunning CSK Memes trending on social media after their match against Gujarat in IPL 2023

இதைவிட டாப் ரகம்னா.. விக்ரம் பட காட்சிதான். இந்த மாதிரி நேரத்துல வீரன்ங்கல்லாம் ஒன்னு சொல்லுவாங்க தெரியுமா.. பார்த்துக்கலாம்.. இப்படி கமல் பேசும் டயலாக்கை சிஎஸ்கே ரசிகாஸ் மீமாக்கி, தங்களை தாங்களே வெறியேற்றி காத்திருக்கிறார்கள் மக்களே.

Story first published: Saturday, April 1, 2023, 11:27 [IST]
Other articles published on Apr 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+