For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்ணா.. 2வது லட்டு திண்ண ஆசையா.. ஜெய்ஷா, கங்குலிக்கு சாதகமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் பிசிசிஐயின் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

Recommended Video

BCCI-ன் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட Supreme Court *Cricket

ஐபிஎல் சூதாட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி லோதா குழு பி சி சி ஐ சீரமைப்பதற்காக பல்வேறு விதிகளை அறிவித்தது.

அதில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக மூன்று ஆண்டுகள் மற்றும் பி சி சி ஐ யில் மூன்றாண்டுகள் எனத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்தால் மீண்டும் பதவியில் நீடிக்க இந்த நிர்வாகிகளுக்கு அனுமதி கிடையாது.

ஆசிய கோப்பை சதம் விளாசிய கோலி.. டி20 தரவரிசையில் கிடுகிடுவென முன்னேற்றம்..இந்திய வீரர்களுக்கு உயர்வு ஆசிய கோப்பை சதம் விளாசிய கோலி.. டி20 தரவரிசையில் கிடுகிடுவென முன்னேற்றம்..இந்திய வீரர்களுக்கு உயர்வு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இரண்டு ஆண்டுகள் இடைவேளை பிறகு தான் பிறகு மீண்டும் பதவிக்கு திரும்பலாம் என்று விதி ஒன்றை வகுத்தது. இதன்படி கங்குலி ஜெய்ஷா கூட்டணி பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. இதனால் இருவரும் தங்களது பதவியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.இதனை அடுத்து இந்த விதியை மாற்றிக்கொள்ள அனுமதிக்க கூறி பிசிசிஐ சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தன்னாட்சி அமைப்பு

தன்னாட்சி அமைப்பு

இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரச்சத் மற்றும் ஹீமோகோலி அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. அப்போது பிசிசிஐ சார்பாக ஆஜரான துஷார் மேத்தா பிசிசிஐ, ஒரு தன்னாட்சி விளையாட்டு அமைப்பு என்றும் அதன் செயல்பாடுகளில் மற்ற அமைப்புகள் தலையிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அனுமதிக்க வேண்டும்

அனுமதிக்க வேண்டும்

கிரிக்கெட்டில் பல்வேறு வளர்ச்சிகளை மேற்கொள்ள ஆறு ஆண்டுகள் என்பது போதாது என்றும் அவர் குறிப்பிட்டார். மாநில கிரிக்கெட் சங்கமும் பிசிசிஐ யும் வெவ்வேறு அமைப்பு என்பதால் இவ்விரண்டிலும் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பணியாற்றினால் மீண்டும் அந்தப் பணியில் அமர இரண்டு ஆண்டுகள் இடைவெளி தேவை என்ற விதியை மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சாதகமான தீர்ப்பு

சாதகமான தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிசிசிஐ கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்த இடைவேளையும் தேவையில்லை என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து கங்குலி, ஜெய்ஷா ஆகியோர் மேலும் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிக்க எந்த தடையும் இல்லை.

Story first published: Wednesday, September 14, 2022, 20:09 [IST]
Other articles published on Sep 14, 2022
English summary
supreme court judgement allow BCCI President and secretary to continue the second term
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X