ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தல் - 17-ந் தேதி முடிவு அறிவிப்பு: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தல் முடிவை வரும் 17-ந் தேதி அறிவிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு லலித்மோடி போட்டியிட்டார். ஆனால் அவருக்கு ஏற்கெனவே பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது. இதனால் அவருக்கு எதிராக பி.சி.சி.ஐ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனால் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவுகள் உச்சநீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையின் போது, தேர்தலில் லலித் மோடி வெற்றிபெற்றால் பிசிசிஐ மனுவை விசாரிப்பதாகவும் வரும் 17-ந் தேதி தேர்தல் முடிவை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Story first published: Monday, January 6, 2014, 15:41 [IST]
Other articles published on Jan 6, 2014


Click it and Unblock the Notifications