Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து பேட்ஸ்மேனை 'குறிவைத்த' இலங்கை பவுலர் லக்மலுக்கு அபராதம்! ஐசிசி அதிரடி உத்தரவு

வெலிங்டன்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரின், உடலை குறிவைத்து பந்து வீசிய இலங்கை பவுலர் சுரங்கா லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டின், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை-இங்கிலாந்து அணிகள் நேற்று வெலிங்டன் மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 309 ரன்களை குவித்தது.

 கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இங்கிலாந்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலை அழைத்தார் இலங்கை கேப்டன் ஆங்கிலோ மேத்யூஸ்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இங்கிலாந்து ரன் குவிக்கிறார்களே என்ற கோபத்தில், பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி குறிவைத்து பந்தை எறிந்தார் சுரங்கா லக்மல். இதையடுத்து கள நடுவர்கள் உடனடியாக அவருக்கு எச்சரிக்கைவிடுத்து, ஒழுங்காக, பந்தை எறியுமாறு கூறினர்.

 பந்து வீச்சு தடுப்பு

பந்து வீச்சு தடுப்பு

ஆனால், அம்பயர்களின் எச்சரிக்கையையும் மீறி, அடுத்த பந்தையும் உடலை நோக்கி எறிந்தார் லக்மல். 4 பந்துகள் வீசியிருந்த நிலையில், உடனடியாக அவரை பந்து வீச கூடாது என்று தடுத்தனர் களநடுவர்கள். போட்டி ரெஃப்ரி டேவிட் பூனிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

 அபராதம்

அபராதம்

இதனிடையே, லக்மலின் செயலுக்காக போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துல்லது. டேவிட் பூன் இதுகுறித்து கூறுகையில், "அது ஒரு ஆபத்தான மற்றும் நியாயப்படுத்த முடியாத பந்து வீச்சாகும்" என்றார்.

 கடும் குற்றம்

கடும் குற்றம்

பேட்ஸ்மேனின் உடலை நோக்கி, ஃபுல்டாசாக பந்தை வீசுவது பாடிலைன் அல்லது பீமர் என்று அழைக்கப்படும். ஐசிசி நடத்தை விதிமுறைகளின் 1வது பிரிவின்கீழ் இது மிகப்பெரும் தவறு மற்றும் தடை செய்யப்பட்ட பந்து வீச்சு முறையாகும். பவுன்சர் பந்தால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் சில மாதங்கள் முன்பு உயிரிழந்த நிலையில், லக்மலின் இந்த செயல் பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, March 2, 2015, 12:54 [IST]
Other articles published on Mar 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+