Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெர்சி நம்பர் 18 மற்றும் நம்பர் 45க்கும் ஓய்வு கொடுங்கள்.. யாருக்கும் வேண்டாம்.. ரெய்னா கருத்து

மும்பை : டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணிந்த ஜெர்சி நம்பரை பிசிசிஐ இனி யாருக்கும் வழங்கக்கூடாது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சுரேஷ் ரெய்னா பல்வேறு கருத்துக்களை கூறினார்.

அதில் இந்திய அணியின் இரு ஜாம்பவான்களாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் விளங்குவதாக சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டார். டி20 கிரிக்கெட்டில் சரியான நேரத்தில் இருவரும் ஓய்வு பெற்று இருப்பதாகவும் ஓய்வு பெற இதைவிட மிகச் சிறந்த தருணம் வேறு எதுவும் கிடையாது என்றும் சுரேஷ் ரெய்னா பாராட்டினார்.

Indian Cricket Team virat kohli suresh raina

மேலும் இரு வீரர்களையும் கௌரவிக்கும் விதமாக இனி எந்த ஒரு வீரருக்கும் நம்பர் 18 மற்றும் நம்பர் 45 ஜெர்சியை பிசிசிஐ யை வழங்கக்கூடாது என்றும் சுரேஷ் என கேட்டுக்கொண்டார். இந்த இரண்டு ஜெர்சிக்கும் பிசிசிஐ ஓய்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சூரியகுமார் யாதவும் கொடுத்த கேச்சை என் வாழ்நாளில் கடைசி மூச்சு வரை மறக்க முடியாது என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

எப்படி 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சட்ஸ் அடித்த கேச்சை கபில்தேவ் பிடித்தாரோ அதேபோல் சூரியகுமார் யாதவ் கேட்ச் அமைந்திருப்பதாகவும் சுரேஷ் ரெய்னா பாராட்டினார். இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் கொண்டாடப்படாத வீரராக அக்சர் பட்டேல் இருப்பதாக சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டார்.

இந்திய அணிக்கு எப்போதெல்லாம் தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் ரன்களும் பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதாகவும் சுரேஷ் ரெய்னா பாராட்டுகிறார்.இந்த நிலையில், சுரேண் ரெய்னா எந்த நம்பர் ஜெர்சியை பயன்படுத்தினார் என்று சமூக வலைத்தள பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து கமெண்ட் பண்ணுங்க.

Story first published: Friday, July 5, 2024, 6:57 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+