For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செய்யக் கூடாததை செய்த ரெய்னா.. சிக்கலில் சிஎஸ்கே வீரர்கள்.. கடும் கோபத்தில் சீனிவாசன்.. கசிந்த தகவல்

சென்னை : சுரேஷ் ரெய்னா வெறும் ஹோட்டல் அறைக்கு சண்டை போட்டு 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினாரா?

Recommended Video

Srinivasan slams Suresh Raina on leaving IPL 2020

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என அந்த செய்தி வந்தது முதல் பலரும் கேட்டு வந்தனர்.

ஆனால், ரெய்னா விவகாரத்தில் தோண்ட, தோண்ட பல புதிய தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது ரெய்னா மீது சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் சீனிவாசன் ஏன் இத்தனை கோபத்தில் இருக்கிறார் என்பது பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.

நேரடி தொடர்பு கூடாது

நேரடி தொடர்பு கூடாது

2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே நடப்பதால் ஐபிஎல் அணிகள், வீரர்கள், உதவியாளர்கள், மைதான ஊழியர்கள் என அனைவரும் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். வெளிநபர்கள் யாருடனும் நேரடி தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

விமர்சனம்

விமர்சனம்

அதே போல, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது என பலவற்றையும் கடைபிடிக்க வேண்டும். சிஎஸ்கே வீரர்கள் பலர் இதை கடைபிடிக்கவில்லை என அந்த அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு வளையம்

பாதுகாப்பு வளையம்

ஆனால், இதில் சுரேஷ் ரெய்னா சில விதிமுறைகளை மீறியது சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் கோபத்தை தூண்டி விட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதற்குள் இருக்க வேண்டும்.

விதிமுறைகள்

விதிமுறைகள்

அதாவது, ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள் மட்டுமே இருக்கும் ஒரு வளையத்தை உருவாக்க வேண்டும். ஒரு வளையத்துக்குள் இருப்பவர்கள் அதைத் தாண்டி வெளிநபர்களை சந்திக்கக் கூடாது.

பாதுகாப்பு வளையத்தை மீறினார்

பாதுகாப்பு வளையத்தை மீறினார்

அப்படி வெளி நபர்களை சந்தித்தால் அவர்கள் மீண்டும் 14 நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்பது போன்ற கடும் கட்டுப்பாடுகளை பிசிசிஐ வகுத்துள்ளது. இந்த நிலையில், துபாயில் சுரேஷ் ரெய்னா பாதுகாப்பு வளையத்தை மீறியதாக தற்போது கூறப்படுகிறது.

கோபத்தை கிளறி உள்ளது

கோபத்தை கிளறி உள்ளது

சிஎஸ்கே அணியில் இரு வீரர்கள் உட்பட 13 நபர்கள் பாதிப்புக்கு உள்ளான நிலையில், ரெய்னாவின் விதிமீறல் சிஎஸ்கே நிர்வாகத்தின் கோபத்தை கிளறி உள்ளது. மற்றபடி ஹோட்டல் அறை குறித்து வெளியானது எல்லாம் ஒரு விஷயமே இல்லை என கூறப்படுகிறது.

சிறிய குறை

சிறிய குறை

சிஎஸ்கே அணியில் எப்போதும் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் மேனேஜருக்கு ஹோட்டலில் சூட் அறை அளிக்கப்படும். சுரேஷ் ரெய்னாவுக்கும் சூட் அறை அளிக்கப்படும். இந்த முறை அவருக்கு சூட் அறை அதான் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பால்கனி இல்லை என்பது மட்டுமே சிறிய குறை.

சீனிவாசன் அதிருப்தி

சீனிவாசன் அதிருப்தி

ரெய்னாவின் விதிமீறலால் சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் அதிருப்தி அடைந்ததாகவும் அதனாலேயே அவர் இந்தியா திரும்பி இருக்கக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெய்னா என்ன நடந்தது எனக் கூறினால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

Story first published: Monday, August 31, 2020, 20:38 [IST]
Other articles published on Aug 31, 2020
English summary
Suresh Raina bio-bubble breach make CSK Srinivasan unhappy says sources. It is also said that balcony issue is not that much important as it seems.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+