Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'சின்ன தல' ரெய்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... யார் சொன்னதுன்னு பாக்கறீங்களா... சிஎஸ்கே!

டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய 13 வருட கிரிக்கெட் கேரியரில் 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20 போட்டிகள் மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் ரெய்னா விளையாடியுள்ளார்.

ரெய்னாவின் 34வது பிறந்தநாள்

ரெய்னாவின் 34வது பிறந்தநாள்

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா. இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் தன்னுடைய 34வது பிறந்தநாளை ரெய்னா இன்று கொண்டாடி வருகிறார்.

'சின்ன தல'க்கு சிஎஸ்கே வாழ்த்து

'சின்ன தல'க்கு சிஎஸ்கே வாழ்த்து

இதையொட்டி பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் ரெய்னாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அவரது சிறப்புகளையும் பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. இதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 'சின்ன தல'க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

விளையாடாத ரெய்னா

விளையாடாத ரெய்னா

கடந்த ஐபிஎல் 2020 சீசனில் சிஎஸ்கே அணியின் சார்பில் விளையாடாமல் நாடு திரும்பினார் ரெய்னா. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. ஆயினும் உரிமையாளர், தோனி ஆகியோருடன் ஏற்பட்ட மனஸ்தாபமே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சிஎஸ்கே, ரெய்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூவாலா கட்டா வாழ்த்து

ஜூவாலா கட்டா வாழ்த்து

முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், இர்பான் பதான் உள்ளிட்டோரும் தங்களது டிவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களை பதிந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். மேலும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

கிரண் ரிஜிஜூ வாழ்த்து

கிரண் ரிஜிஜூ வாழ்த்து

இதனிடையே விளையாட்டுததுறை அமைச்சர் கிரண் ரிஜிஜூயும் ரெய்னாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக பயிற்சியளித்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

Story first published: Friday, November 27, 2020, 15:38 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+