Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தங்கத்தை தவறவிட்ட ஐபிஎல் அணிகள்.. அபுதாபி டி10 தொடரில் கெத்து காட்டிய ரெய்னா.. வேற வெலல் இன்னிங்ஸ்

அபுதாபி : சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு 35 வயது எல்லாம் பெரும் ஒரு பொருட்டே இல்லை. சச்சின் டெண்டுல்கர் எல்லாம் 38 வயதில் தான் உலக கோப்பையை முதல் முறையாக வென்றார்.

அந்த தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர். ஒட்டுமொத்தமாக 2வது இடம். 35 வயதில் ரோகித் சர்மா, 3 பிரிவுகளிலும் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்படுகிறார்.

ஆனால் சுரேஷ் ரெய்னா 33 வயதில், இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய நண்பர் தோனி விலகியதால், அவரும் அதே நாளில் விலகினார்.

தோனியின் அறிவுரை

தோனியின் அறிவுரை

கிரிக்கெட்டில் எப்போதும் எமோசனுக்கு வேலையே இல்லை. ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள் என்பதற்காக சிக்சர் அடிக்க கூடாது. சூழலுக்கு ஏற்ப தான் சிக்சர் அடிக்க வேண்டும். இல்லையேனில் நீங்கள் ஆட்டமிழக்க நேரிடும். இது நான் சொன்னது அல்ல. தோனி ஒரு முறை யூசூப் பதானுக்காக கூறிய வார்த்தைகள்.

ஐபிஎல் அவமானம்

ஐபிஎல் அவமானம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிய ரெய்னா, 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். எனினும் அடுத்த ஆண்டு வந்த ரெய்னாவால் பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்த முடியவில்லை. இதன் பிறகு அவர் காயம் ஏற்பட்டதாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ரெய்னாவை குறைத்து மதிப்பிட்ட ஐபிஎல் அணிகள், அவரை மெகா ஏலத்தில் சொல்லி வைத்தது போல் யாரும் தேர்வு செய்யவில்லை.

புதிய டி10 தொடர்

புதிய டி10 தொடர்

இதனால் மணமுடைந்த ரெய்னா, ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டியிலிருந்தும் விலகுவதாக கூறி, லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் விளையாட சென்றார். அதன் பிறகு ரெய்னா அபுதாபியில் நடைபெற்று வரும் கிரிக்கெட்டின் புதிய வரவான டி10 தொடரில் விளையாட டெக்கான் கிளேடியட்டர் அணிக்காக ஒப்பந்தமானார்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

கடந்த நவ. 23ஆம் ஆண்டு தேதி இந்த தொடரில் தனது அறிமுக போட்டியில் ரெய்னா களமிறங்கி டக் அவுட் ஆனார். எனினும் இன்று நியூயார்க் ஸ்ட்ரைக்கருக்கு எதிராக ரெய்னா விளையாடினார். 19 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் ரெய்னா களத்துக்கு வந்தார். இரண்டு பவுண்டரி ஒரு இமாலய சிக்சரை விளாசிய ரெய்னா, 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக 10 ஓவரில் டெக்கான் அணி 109 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் ரெய்னாவை இந்திய அணி யும், ஐபிஎல் அணிகளும் மிஸ் செய்வதாக புலம்பி வருகின்றனர்.

Story first published: Saturday, November 26, 2022, 23:57 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+