For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங் ஆர்டர்ல கீழ இறங்கி விளையாடுனாரு.. பீல்டிங்ல கலக்கினாரு.. அணிக்காக கடுமையான பணிகளை செஞ்சாரு

டெல்லி : இந்திய அணிக்காக மிகவும் கடுமையான பணிகளை சுரேஷ் ரெய்னா செய்துள்ளதாக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

பேட்டிங் ஆர்டர்ல கீழ இறங்கி விளையாடியதாகட்டும், பீல்டிங்கிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதாக ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ராகுல் டிராவிட்டின் வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து சுரேஷ் ரெய்னாவும் ராகுல் டிராடிவிட்டடிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முக்கிய தருணங்களில் ரெய்னா

முக்கிய தருணங்களில் ரெய்னா

கடந்த 2005ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச ஆட்டத்தை விளையாடினார் சுரேஷ் ரெய்னா. அப்போது இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் விளங்கினார். 2011 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன் டிராபி போன்ற முக்கிய தருணங்களில் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார்.

ரெய்னா மேற்கொண்டதாக பாராட்டு

ரெய்னா மேற்கொண்டதாக பாராட்டு

இந்நிலையில் அணிக்காக கடுமையான பணிகளை சுரேஷ் ரெய்னா மேற்கொண்டதாக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பேட்டிங் ஆர்டரில் கீழிறங்கி விளையாடியது மற்றும் பீல்டிங்கில் முக்கிய சாதனைகள் என ரெய்னாவின் சாதனைகளை டிராவிட் பட்டியலிட்டுள்ளார். ரெய்னா இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு காரணமான ரெய்னா

வெற்றிக்கு காரணமான ரெய்னா

ஐபிஎல் போட்டிகளில் ரெய்னா 3வது இடத்தில் இறங்கி ஆடுகிறார். இதன்மூலம் ஐபிஎல்லில் விராட் கோலிக்கு அடுத்ததாக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமைக்கும் உள்ளாகியுள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளிலும் அவர் சிறப்பான ரன்களை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் முக்கியமான வெற்றிகளுக்கு ரெய்னாவும் முக்கிய காரணம் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா நன்றி

சுரேஷ் ரெய்னா நன்றி

இந்நிலையில் டிராவிட்டின் இந்த வீடியோவிற்கு சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின்மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தன்னை ஊக்குவிக்கும்விதமாக வீடியோ வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்த ரெய்னா, தன்னுடைய சிறுவயதிலிருந்து டிராவிட்டை பார்த்து தான் ஊக்கமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். அவருடைய வழிகாட்டுதலில்தான் தன்னுடைய கிரிக்கெட் கேரியர் சிறப்பாக அமைந்ததாகவும் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, August 18, 2020, 19:54 [IST]
Other articles published on Aug 18, 2020
English summary
Thank you so much Rahul Bhai for such encouraging words -Suresh Raina
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+