Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதுவும் தெரியாது.. ரொம்ப வருத்தமாக இருந்தது.. நைட் கிளப் கைதில் நடந்தது என்ன?.. ரெய்னா கலக்கம்!

சிட்னி: நேற்று அதிகாலை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. கைது குறித்து ரெய்னா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டார். போலீசால் ரெய்னா கைது செய்யப்பட்டாலும் சில நிமிடங்களில் பின் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார்.

இரவு நேரத்தில் நைட் கிளப்பில் குடித்துவிட்டு ஆடியதாக ரெய்னா கைது செய்யயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைது

கைது

இதில் ரெய்னா மட்டும் கைது செய்யப்படவில்லை.அவருடன் சேர்த்து இன்னும் 32 பேர் கைது செய்யப்பட்டனர். சில பாலிவுட் பிரபலங்கள், பாடகர்கள் பலர் இதில் கைது செய்யப்பட்டனர். ரெய்னாவின் நெருங்கிய நண்பரும் கைது செய்யப்பட்டார்.

ஏன்

ஏன்

மும்பை கொரோனா விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் இரவு நேர கிளப்களை திறக்க கூடாது. ஆனால் இதை மீறி மும்பையில் இரவு 2.30 மணி வரை ரெய்னா குடித்துவிட்டு ஆடி இருக்கிறார். இதன் காரணமாகவே அவரும், அந்த கிளப்பில் இருந்தவர்களும் கைது செய்யயப்பட்டனர்.

விளக்கம்

விளக்கம்

இந்த கைது குறித்து ரெய்னா தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த கைது குறித்து ரெய்னா மிகவும் வருத்தப்பட்டார். தனது தவறுக்கு அவர் வருந்துகிறார். மும்பையில் அவர் ஷூட்டிங் ஒன்றுக்காக வந்து இருந்தார். ஆனால் இந்த ஷூட்டிங் நீண்ட நேரம் நடந்தது .

தெரியாது

தெரியாது

இதனால் ஓய்வு எடுக்க அவர் அந்த கிளிப்பிற்கு சென்றார். நாங்கள் வெளி ஆட்கள். அதனால் எங்களுக்கு மும்பையின் விதிப்பற்றி தெரியாது. இந்த இரவு நேர கட்டுப்பாடு குறித்து ரெய்னாவிற்கு தெரியாது.

முடிந்தது

முடிந்தது

போலீஸ் சொன்னவுடன் ரெய்னா அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அனைத்து விதிமுறைகளையும் ரெய்னா பின்பற்றினார். இருப்பினும் தன்னுடைய தவறுக்கு ரெய்னா வருந்துகிறார் என்று அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டடுள்ளது.

Story first published: Wednesday, December 23, 2020, 9:23 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+