Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் விஷயத்தில் என்ன நடக்கிறது? கோலி செய்யும் தவறை புட்டு புட்டு வைத்த சுரேஷ் ரெய்னா!

Recommended Video

I can be India's No. 4: Suresh Raina | கோலி செய்யும் தவறை புட்டு புட்டு வைத்த ரெய்னா!

மும்பை : இந்திய அணியில் சமீப காலமாக மோசமாக ஆடி வரும் ரிஷப் பண்ட்டுக்கு என்ன ஆனது? அவர் ஏன் அப்படி மோசமாக ஆடுகிறார்? என்பதை பற்றி தெளிவாக விவரித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ன தவறு செய்கிறார்கள் என்பதையும் கோடிட்டு, மறைமுகமாக குத்திக் காட்டி இருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை வரும் நிலையில், சுற்றி வளைத்து தனக்கும், தோனிக்கும் சேர்த்து அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார் ரெய்னா.

அணியில் வாய்ப்பு

அணியில் வாய்ப்பு

ரிஷப் பண்ட் தற்போது ஆடி வரும் நான்காம் வரிசையில் தான் ஏற்கனவே சிறப்பாக ஆடி இருக்கும் நிலையில், டி20 உலகக்கோப்பையும் வருவதால் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறி இருக்கிறார்.

ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுப்பு

ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுப்பு

தோனி ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து தன் வாய்ப்பை இழந்தார். டி20 அணியில் 2018 வரை ஆடியவர் ஒரீரு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்று கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

நான்காம் வரிசை

நான்காம் வரிசை

அவர் ஆடிய நான்காம் வரிசைக்கு இன்று வரை யாரை ஆட வைக்கலாம் என தேடி வருகிறது இந்திய அணி. தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, விஜய் ஷங்கர், ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் ரெய்னாவுக்கு பின் அந்த இடத்தில் பேட்டிங் செய்து பார்த்தனர்.

ரிஷப் பண்ட் சொதப்பல்

ரிஷப் பண்ட் சொதப்பல்

யாரும் சரியாக ஆடாத நிலையில், கடைசி கட்டமாக ரிஷப் பண்ட் அந்த இடத்தில் ஆடி வருகிறார். அவரும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களில் சரியாக ரன் குவிக்கவில்லை.

ரெய்னா விளக்கம்

ரெய்னா விளக்கம்

இந்த நிலையில் தான் ரிஷப் பண்ட் செய்யும் தவறுகள் பற்றி ஹிந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் விளக்கி இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. மேலும், கோலி செய்யும் தவறை மறைமுகமாக சுட்டிக் காட்டி, தோனி போன்ற ஒருவர் தான் பண்ட்டுக்கு தேவை என்பது பற்றியும் கூறி இருக்கிறார்.

பண்ட் என்ன செய்கிறார்?

பண்ட் என்ன செய்கிறார்?

"பண்ட் குழப்பமாக இருக்கிறார். தன் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. அவர் சிங்கிள் ரன் அடிக்க வேண்டும் என நினைக்கிறார், பந்தை தடுக்கிறார், மேலும் அதில் தோற்றுப் போகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது வேலைக்கே ஆகாது

இது வேலைக்கே ஆகாது

தோனி வீரர்களுடன் பேசுவது போல, ஒருவர் அவருடன் பேச வேண்டும். கிரிக்கெட் மனம் சார்ந்த விளையாட்டு. ரிஷப் பண்ட் தன் அதிரடி ஆட்டத்தை ஆட ஆதரவு அளிக்க வேண்டும். தற்போது அவர் அறிவுரைகளின் படி ஆடுகிறார். அது வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார் ரெய்னா.

கோலி செய்யும் தவறு

கோலி செய்யும் தவறு

அறிவுரைகளின் படி பண்ட் ஆடுகிறார் என்றால், அது கோலி மற்றும் ரவி சாஸ்திரி கூறும் அறிவுரைகள் தான். அவர்களை தான் மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார் ரெய்னா. கேப்டன் கோலி, தோனி போல ஆதரவு அளிக்காமல் அறிவுரை கூறுவது வேலை செய்யவில்லை என்கிறார் ரெய்னா.

மீண்டும் ரெய்னா

மீண்டும் ரெய்னா

பண்ட் விஷயத்தை பற்றி விளக்கிய ரெய்னா, தான் ஏற்கனவே நான்காம் வரிசையில் சிறப்பாக அடி இருப்பதால், டி20 உலகக்கோப்பைகளுக்கு முன் தான் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறி இருக்கிறார். s

தோனி சொத்து

தோனி சொத்து

மேலும், தோனி டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்று அவருக்கும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மறைமுகமாக கூறி இருக்கிறார்.

Story first published: Friday, September 27, 2019, 12:25 [IST]
Other articles published on Sep 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+