Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரெய்னா.. தீவிர பயிற்சியில் இறங்கினார்..CSK -க்கு திரும்ப திட்டம்

லக்னோ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் பழைய பார்மில் இல்லை என்ற காரணத்தால், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்தும் ரெய்னா நீக்கப்பட்டார்.

சிஎஸ்கே அழைப்பு

சிஎஸ்கே அழைப்பு

உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடி பயிற்சி எடுத்து கொள்ளுமாறு சிஎஸ்கே நிர்வாகம் ரெய்னாவை அறிவுறுத்தியது. மேலும், இந்தியா சிமெண்ட்ஸ் நடத்தும் போட்டியில் பங்கேற்று விளையாடுமாறு சிஎஸ்கே அழைப்பு விடுத்தது. ஆனால், அதனை ரெய்னா கேட்கவில்லை. இதன் காரணாக அவர், ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத மற்ற அணிகளும் ஐபிஎல் மெகா ஏலத்தில் ரெய்னாவை தேர்வு செய்யவில்லை.

முதல் காதல்

முதல் காதல்

இதனால் விரக்தி அடைந்த ரெய்னா தற்போது தனது திறமையை நிரூபிக்க மீண்டும் முடிவு எடுத்து கிரிக்கெட் களத்துக்கு திரும்பியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரெய்னா தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில், அவர் உபி அணியின் ஜெர்சியை அணிந்து தனது முதல் காதல் என்று குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் போட்டி ஒன்றிலும் ரெய்னா விளையாடும் வீடியோ இடம்பெற்றுள்ளது.

ரெய்னா நட்பு

ரெய்னா நட்பு

இதன் காரணமாக, ரெய்னா பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டியில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. உபி அணியில் திரும்பி மீண்டும் ரெய்னா ரன் குவித்தால், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் ரெய்னாவை மீண்டும் போட்டி போட்டு அணிகள் வாங்க முயற்சி செய்யும். மேலும் தோனி கடந்த முறை செய்ய சொன்னதை தற்போது இம்முறை ரெய்னா செய்ய உள்ளார்.

தோனியுடன் நட்பு

தோனியுடன் நட்பு

சிஎஸ்கேவில் ரெய்னா இருந்த போது, தோனிக்கும் அவருக்கும் மன கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இருவரும் கடந்த ஜூலை மாதம், இந்திய அணி இங்கிலாந்து சென்ற போது போட்டியை மைதானத்துக்கு நேரில் சென்று கண்டுகளித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனால் தோனி, ரெய்னா மீண்டும் நண்பர்களாகி இருக்கலாம் என்றும், தோனியின் அறிவுறுத்தலின் படியே ரெய்னா மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Wednesday, August 24, 2022, 10:01 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+