Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சந்த்ரா.. இவர் தான் உலககோப்பை வாங்கி தரப்போறாரு.. சீனியர் வீரர் மீது ரெய்னா நம்பிக்கை..என்ன ஸ்பெஷல்

மும்பை : டி20 உலக கோப்பை இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஸ்வர் குமாரை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை அளித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னாவும் புவனேஸ்வர் குமாரும் உள்ளூர் போட்டிகளில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடி இருக்கின்றனர்.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் புவனேஸ்வர் குமாரின் திறமை குறித்து சுரேஷ் ரெய்னாவுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எனினும் புவனேஸ்வர் குமார் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது வழக்கமான பந்து வீச்சை அவர் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களின் ரன்களை வாரி வழங்கியதால் இந்திய அணி முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவியது.

அனுபவம்

அனுபவம்

இதன் காரணமாக புவனேஸ்வர் குமார் மீது கடும் விமர்சனம் எழுந்து வரும் நிலையில் சுரேஷ் ரெய்னா அவருக்கு ஆதரவான கருத்துக்களை கூறியுள்ளார். இது குறித்து பேசி ரெய்னா, புவி அனுபவம் வாய்ந்த வீரர். அவர் இந்திய அணிக்காக பலமுறை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். சில சமயம் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவார்கள்.

திறமை இருக்கிறது

திறமை இருக்கிறது

ஆனால் அவரிடம் இன்னும் பந்தை ஸ்விங் செய்யும் திறமை இருக்கிறது. நெருக்கடியான சமயத்தில் புவனேஸ்வர் குமாரை தான் கேப்டன்கள் இன்னும் நாடுவார்கள். முக்கியமான சமயத்தில் சிறப்பாக பந்து வீசும் திறமை அவரிடம் இருக்கிறது. விராட் கோலி ஆசிய கோப்பையில் சதம் விளாசியே அதே ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்து வீசினார்.

2 முறை தொடர் நாயகன்

2 முறை தொடர் நாயகன்

புவனேஸ்வர் குமாரிடம் knuckle ball, ஸ்விங் போன்ற திறமைகள் இருக்கிறது. இதனால் புவனேஸ்வர் குமாரை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.நிச்சயம் இந்தியாவுக்காக அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.புவனேஸ்வர் குமார் கடந்த ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் தொடர் நாயகன் விருதை வென்றார். அதன் பிறகு அவருடைய பார்மை இழந்ததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Sunday, October 16, 2022, 21:07 [IST]
Other articles published on Oct 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+