Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த வருடமும் எம்.எஸ்.தோனி விளையாடுவார்.. சுரேஷ் ரெய்னா கூறிய சுவாரஸ்ய தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி இந்தாண்டு ஓய்வு பெற மாட்டார், தொடர்ந்து அடுத்த ஆண்டும் விளையாடுவார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சி செய்தியை கூறியுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வரும் மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த சீசனில் அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடும் எனக்கூறியதால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு இது கூடுதல் மகிழ்ச்சியாகும்.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 40 வயதாகிவிட்டது. ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ஐபிஎல்-ல் மட்டுமே தற்போது விளையாடி வருகிறார். சென்னை மைதானத்தில் தான் ஓய்வு பெறுவேன் என்ற அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்தாண்டு அறிவிப்பும் வந்துவிட்டது. இதனால் எப்படியாவது கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு அவரும் விடைபெறுவார் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.

சுரேஷ் ரெய்னா விளக்கம்

சுரேஷ் ரெய்னா விளக்கம்

இந்நிலையில் இதில் திடீர் ட்விஸ்ட் கொடுத்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இதுகுறித்து பேசியுள்ள அவர், எனக்கு தெரிந்தவரை அவர் ஓய்வை அறிவிக்கமாட்டார் என நினைக்கிறேன். எம்.எஸ்.தோனி சிறப்பாக பேட்டிங் செய்கிறார், அவரின் ஃபிட்னஸ் மிகச்சிறப்பாக உள்ளது. அடுத்த சீசனிலும் அவர் விளையாடலாம். இந்த வருடம் அவர் எப்படி விளையாடுகிறாரோ, அதனை பொறுத்து தான் அவரின் ஓய்வு முடிவு இருக்கலாம். அவரின் முடிவுகளை எதிர்நோக்கி தான் அனைவரும் உள்ளனர்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

தோனியிடம் தொடர்ந்து தொலைப்பேசியில் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவர் மிகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். பெரிய ஷாட்களை ஆடுவதை பார்க்கும் போது, இந்தாண்டு நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் எனத்தெரிகிறது. கோப்பையை வெல்ல உதவுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்தாண்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை வாங்கியிருப்பது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. தோனி ஓய்வு பெற்ற பின்னர் அவரின் கேப்டன்சி பதவியை பென் ஸ்டோக்ஸ் எடுத்துக்கொள்வதற்கு தான் அதிக வாய்ப்புள்ளன. மற்றொருபுறம் ருதுராஜ் கெயிக்வாட்டிற்கும் கேப்டன்சி பொறுப்பை கொடுக்கலாம் எனத்தெரிகிறது.

Story first published: Thursday, March 16, 2023, 17:13 [IST]
Other articles published on Mar 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+