Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளேயிங் 11ல் பெரிய தப்பு இருக்கு.. ரோகித்துக்கு சுரேஷ் ரெய்னா முக்கிய அட்வைஸ்.. அட இதுவும் சரிதானே!

மும்பை: இந்திய அணியில் ரோகித் சர்மா தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 23ம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்திய அணியின் ப்ளேயிங் 11 ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு வீரர்களுக்கும் அறிவித்துவிட்டதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார். முன்கூட்டியே கூறினால் தயாராவார்கள் என்பதற்காக முன்பே தேர்வு செய்துவிட்டதாக கூறினார். அதன்படி இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என படு பலமாக உள்ளது.

ரெய்னா அட்வைஸ்

ரெய்னா அட்வைஸ்

இந்நிலையில் ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா தவறு செய்துள்ளதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் அணியில் இருந்தால் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். ஏனென்றால் அவர் ஒரு இடதுகை வீரர் ஆகும். இந்தியாவின் X -Factor ஆக பண்ட் தான் இருப்பார்.

என்ன காரணம்

என்ன காரணம்

2007ம் ஆண்டு உலகக்கோப்பையில் கவுதம் கம்பீர் எப்படி உதவினார் என்பது நமக்கு தெரியும். குறிப்பாக யுவ்ராஜ் சிங் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதே போல 2011 உலகக்கோப்பையில் இவர்கள் இருவரும் மிகப்பெரிய பணியை செய்திருந்தனர். எனவே அணியில் இடது கை வீரர் இருப்பது கூடுதல் பலமாக இருக்கும்.

நம்பிக்கை இருக்கு

நம்பிக்கை இருக்கு

முதல் பந்தில் இருந்தே எப்படி சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதை ரிஷப் பண்ட் அறிவார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். ரோகித் சர்மா இதனை யோசிக்க வேண்டும். தற்போது கூட அணியில் மாற்றம் கொண்டு வரலாம் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 19, 2022, 19:48 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+