ஸ்டோக்ஸ் தான் அடுத்த கேப்டனா? சிஎஸ்கே வின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. மும்பை தான் பட்டாசு.. ரெய்னா கருத்து
மும்பை : ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டது என்பது குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 80 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவார்கள்.
நேற்று ஒரு நாள் மட்டும் 167 கோடி ரூபாய் 10 அணிகளால் செலவழிக்கப்பட்டது. ஐபிஎல் ஏலம் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு சென்ற வீரர் என்ற பெருமையை சாம் கரன் 18 கோடியே 50 லட்சம் பெற்று படைத்தார்.
இந்த நிலையில் ஏலம் குறித்து பேட்டி அளித்துள்ள சுரேஷ் ரெய்னா ஐபிஎல் மூலம் பல வீரர்களின் வாழ்க்கை மாறும்.

கோரிக்கை
இந்த ஏலத்தில் கூட இந்தியாவின் சிறிய ஊர்களில் இருந்து வந்துள்ள வீரர்கள் பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறார்கள். ஐபிஎல் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும். கிரிக்கெட் வீரர் ஆகவும் தனிப்பட்ட முறையில் ஐபிஎல் உங்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். இதில் நிறைய வீரர்கள் நாளை இந்திய அணிக்காகவும் விளையாடலாம். இந்தப் பணத்தை வைத்து முதலில் உங்கள் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுங்கள்.

உலக சாம்பியன்
உங்களை சார்ந்தவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணிக்காக கடுமையாக உழைத்தால் உங்களை அவர்கள் விடவே மாட்டார்கள். நீண்ட காலத்திற்கு உங்களை அரவணைத்து செல்வார்கள். இதன் மூலம் நீங்கள் நன்மை அடையலாம். என்னை பொறுத்தவரை சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்சை தேர்வு செய்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக நான் நினைக்கிறேன். பென் ஸ்டோக்ஸ் ஒரு உலக சாம்பியன்.

விசில் போடு
டி20 உலக கோப்பையில் அவருடைய அணிக்காக சிறப்பாக விளையாடியிருக்கிறார். டெஸ்ட் தொடர்களில் பல வெற்றிகளை கேப்டன் ஆக பெற்று இருக்கிறார். தற்போது அவர் நல்ல மனநிலையில் இருப்பார் என நம்புகிறேன். சென்னை அணியில் உள்ள இளைஞர்களுக்கு நிச்சயம் உதவும். சென்னை மக்கள் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சென்னையில் இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாக கழிப்பார் என நம்புகிறேன்.

பட்டாசை கிளப்புவார்
நிறைய விசில் போடு சம்பவம் சிஎஸ்கே அணிக்காக நடக்கும். தோனியிடம் புனே அணிக்காக விளையாடி இருக்கிறார்கள். இதனால் சிஎஸ்கே எடுத்த நல்ல முடிவாக இதை பார்க்கிறேன். மும்பை அணி சாம் கரன், கேமரான் கிரின் பின்னால் சென்றது. இறுதியில் பொலார்டுக்கு பதிலாக கிரீன் கிடைத்திருக்கிறார்.மும்பை அணி இம்முறை வான்கடே மைதானத்தில் விளையாடும்போது கிரீன் நிச்சயம் பட்டாசை கொளுத்துவார்.


Click it and Unblock the Notifications