Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பரப்பு!! டி20யில் சுரேஷ் ரெய்னா முதல் இடம்.. கோலிக்கு இங்கே இரண்டாம் இடம் தான்!

டெல்லி : சுரேஷ் ரெய்னா டி20 போட்டிகளில் 8000 ரன்கள் கடந்து புதிய சாதனை செய்துள்ளார்.

இது சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமல்ல. ஐபிஎல் உட்பட அனைத்து டி20 போட்டிகளையும் சேர்த்து சுரேஷ் ரெய்னா 8000 ரன்களை கடந்துள்ளார்.

8000 ரன்கள் கடந்தார்

8000 ரன்கள் கடந்தார்

இதன் மூலம் இந்திய அளவில் 8,000 டி20 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். சுரேஷ் ரெய்னா தற்போது 300 போட்டிகளில் 8001 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சாதனையை சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் உத்தரபிரதேச அணிக்காக ஆடிய பொது ரெய்னா எட்டினார்.

இந்திய அளவில் ரெய்னா நம்பர் 1

இந்திய அளவில் ரெய்னா நம்பர் 1

இந்திய அளவில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தில் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். அவர் 251 போட்டிகளில் 7833 ரன்கள் அடித்து ரெய்னாவை முந்த காத்துக் கொண்டு இருக்கிறார்.

கிறிஸ் கெயில் டாப்

கிறிஸ் கெயில் டாப்

உலகளவில் அதிக டி20 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவர் 269 போட்டிகளில் 12,298 ரன்கள் அடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருப்பவரை விட கெயில் சுமார் 2,300 ரன்கள் அதிகம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20யில் டாப் 5

டி20யில் டாப் 5

அவருக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்குல்லம் 9922 ரன்கள் அடித்து இருக்கிறார். அவரைத் தொடர்ந்து கீரான் பொல்லார்டு 8,838 ரன்கள், ஷோயப் மாலிக் 8,603 ரன்கள், டேவிட் வார்னர் 8,111 ரன்கள் அடித்துள்ளனர்.

அதிக போட்டிகள்

அதிக போட்டிகள்

ரெய்னா மேலும் சில சாதனைகளும் செய்துள்ளார். தோனிக்கு அடுத்து இந்திய அளவில் 300 டி20 போட்டிகளில் ஆடிய வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே. தோனி 301 போட்டிகள், ரெய்னா 300 போட்டிகள் மற்றும் ரோஹித் சர்மா 299 போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடவுள்ளார். அதிலும் ரெய்னா கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, February 25, 2019, 18:40 [IST]
Other articles published on Feb 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+