Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்த ஐபிஎல்-ஐ குறிவைக்கும் ரெய்னா.. உள்ளூர் போட்டியில் ஆட விருப்பம் சிஎஸ்கேவுக்கு வருவாரா சின்ன தல

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டியில் ஆட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

35 வயதான சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி இருந்தாலும், ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதனையடுத்து சுரேஷ் ரெய்னா சிறிது வாரம் ஐபிஎல் வர்ணனையாளராக பணிபுரிந்தார். 35 வயதான ரெய்னா, கடந்த 2 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஏதிலும் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் ஃபார்மில் இல்லை என்ற காரணத்தால் தான், அவரை எந்த ஐபிஎல் அணியும் மெகா ஏலத்தில் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

உள்ளூர் கிரிக்கெட்

உள்ளூர் கிரிக்கெட்

ரெய்னாவிடம் இன்னும் கிரிக்கெட் விளையாட வயது இருக்கிறது. மேலும் கடந்த ஏலத்தில் தம்மை யாரும் எடுக்காததால் விரக்தி அடைந்துள்ள ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனை குறிவைத்து காய் நகர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியில தொடர்ந்து விளையாடி, அதில் தமது திறமையை நிரூபித்தால், ஐபிஎல் வாய்ப்பு தானாக வரும்.

உடல் தகுதி

உடல் தகுதி

இதனால் இந்த திட்டத்தில் ரெய்னா உள்ளார். இந்த நவம்பர் மாதம் வந்தால் அவரது வயது 36. அவரால் குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் விளையாட முடியும். இதனால் முதலில் உடல் தகுதியை எட்டிய பிறகு, உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இழந்த ஃபார்மை மீட்க இருக்கிறார். காஷ்மீரை சேர்ந்த ரெய்னா, உ.பி. மாநிலத்தில் வசித்து வருகிறார்.

எந்த ஐபிஎல் அணி?

எந்த ஐபிஎல் அணி?

இதனால், அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றால் ஒரு வேளை லக்னோ அணிக்காக விளையாடலாம். இல்லை, உள்ளூர் போட்டியில் விளையாடிவிட்டு வா என்று சிஎஸ்கேவின் அன்பு கட்டளையை நிறைவேற்றிவிட்டால், சிஎஸ்கே அணியே மீண்டும் அவரை தேர்வு செய்யலாம். இவ்விரண்டுக்கும் வாய்ப்பு அதிகமாவே உள்ளது.

Story first published: Saturday, May 7, 2022, 16:55 [IST]
Other articles published on May 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+