Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரெய்னா ஆப்சென்ட்! கர்ப்பிணி மனைவியை கவனிக்க பறந்தார்

பெங்களூர்: பெங்களூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தில் ரெய்னா கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருடைய நீண்டநாள் சாதனை ஒன்று முறிவடையவுள்ளது.

2008 முதல் ஐ.பி.எல் தொடரில் ஆரம்பித்து இதுவரை ஐபிஎல் போட்டியையும் தவறவிடாமல் விளையாடியவர் என்ற பெருமைக்குறியவர் சுரேஷ் ரெய்னா.இந்நிலையில் ரெய்னாவின் மனைவி பிரியங்காவுக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது.

Suresh Raina to miss game against RCB

இதற்காக ரெய்னா ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு மனைவியை கவனித்து கொள்வதற்காக ஹாலந்து சென்றிருக்கிறார். இதன் மூலம் தனது 9 ஆண்டுகால ஐ.பி.எல் ஆட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் ஆடியவர் என்ற சாதனையை அவர் இழக்கிறார்.

பெங்களூருவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சரை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல் புள்ளிகள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கு, சுரேஷ் ரெய்னாவின் இழப்பு பேரிழப்பாகவே கருதப்படுகிறது.

எனினும், தங்கள் அணியில் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் திறமை கொண்ட டிவைன் பிராவோ, டிவைன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ஆரோன் பின்ச் போன்ற பல வீரர்கள் உள்ளனர் என குஜராத் அணியின் பயிற்சிளார் பிராட் ஹோட்ஜ் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பும் வரை பிரென்டன் மெக்கல்லம் குஜராத் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும்அவர் தெரிவித்தார்.

Story first published: Saturday, May 14, 2016, 15:05 [IST]
Other articles published on May 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+