அருமையான மனைவி.. அழகான குழந்தைங்க.. ஆரோக்கியமான வாழ்க்கை.. வேறென்னங்க வேண்டும்!
டெல்லி: டெல்லியைச் சேர்ந்தவரும், அதிரடி ஆட்டக்காரருமான சுரேஷ் ரெய்னா தனது குடும்பத்துடன் இருக்கும் சூப்பர் போட்டோவை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் கலக்கியவர். தற்போது ஊரடங்கால் அனைவரும் வீட்டோடு முடங்கியுள்ளனர். சுரேஷ் ரெய்னாவும் இப்போது தனது குடும்பத்தோடு நேரம் செலவழித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் போட்டுள்ளார். குழந்தைகளுடன் இருக்கும் படம் அவர் போடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல வீடியோக்கள், புகைப்படங்களை அவர் போட்டுள்ளார்.

குடும்பத்துடன் போட்டோ
சுரேஷ் ரெய்னா தற்போது போட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. பலரையும் கவர்ந்துள்ளது. காரணம் இது சற்றே வித்தியாசமானது. இந்தப் படத்தில் சுரேஷ் ரெய்னாவும் அவரது மனைவியும் உள்ளனர். கூடவே ஆளுக்கு ஒரு கையில் அவர்களது குழந்தைகள். ரெய்னாவும், மனைவியும் ஒர்க் டவுட் செய்து டயர்ட் ஆக இருப்பது போல தெரிகிறது.

குடும்ப ஆரோக்கியம்
இந்தப் படத்தைப் போட்டு சுரேஷ் ரெய்னா போட்டுள்ள கமெண்ட்டில், மகிழ்ச்சிகரமான ஆரோக்கியமான பெற்றோர்கள், எப்போதுமே ஆரோக்கியமான மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்க்கிறார்கள். எங்களது அன்பையும், பாசத்தையும், உறவையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள இந்த லாக்டவுன் எங்களுக்கு உதவியுள்ளது. அதேசமயம், வீட்டு வன்முறையால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதையும், வீடுகளில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் படிக்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

வன்முறை வேண்டாம்
வீட்டு வன்முறையில் சிக்குவோருக்கு நாங்கள் வைக்கும் வேண்டுகோள், தயவு செய்து உரியவர்களிடம் உங்களது பிரச்சினையைக் கொண்டு செல்லுங்கள். உங்களுக்குள் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ரெய்னா உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். உண்மைதான் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் பலருக்கும் விரக்தி, எரிச்சல் உள்ளிட்டவை வந்து விடுகிறது. இதை குடும்பத்தினர் மீது காட்டுகின்றனர்.

வீட்டுப் பெண்களுக்கு உதவுங்கள்
பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. வீட்டினர்தான் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் இது நடப்பதில்லை. இதனால்தான் வீடுகளில் எரிச்சல், கோபம் அதிகமாகி ஒருவர் மீது ஒருவர் காட்டும் சூழல் ஏற்படுகிறது. இதைக் களைந்து அனைவரும் அன்பு பாராட்டி இந்த இக்கட்டான நேரத்தைக் கடந்து வர வேண்டும் என்பதே ரெய்னா குடும்பத்தாரின் கோரிக்கை.


Click it and Unblock the Notifications