For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது மட்டும் நடந்தால், இந்தியாவுக்கு தான் உலககோப்பை- பும்ராவுக்கு மாற்று ஷமி கிடையாது.. ரெய்னா பேச்சு

லக்னோ : டி20 உலகக் கோப்பை தொடங்கி இரண்டு நாட்களுக்குள் பல்வேறு பரப்பரப்பான ஆட்டங்கள் நடைபெற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோதிய பயிற்சி ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதில் கடைசி ஓவரில் முகமது ஷமி பந்து வீசி நான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து ரெய்னா பேசியுள்ளார். அதில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் ஆட்டம் எப்போதுமே முக்கியம்.

நல்ல ஃபார்ம்

நல்ல ஃபார்ம்

முகமது ஷமி, இந்தியாவின் x factor ஆக முக இருப்பார். ஆர்ஸ்தீப் சிங், சூர்யகுமார் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர் . விராட் கோலியும் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.ரோகித் சர்மா ஒரு சிறந்த கேப்டனாக இருக்கிறார். இதனால் நாம் முதல் போட்டியில் வென்றால் அது நமக்கு நல்லதை தரும். அனைவரும் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.

ஷமி மாற்று வீரர் இல்லை

ஷமி மாற்று வீரர் இல்லை

இருப்பினும் பும்ராவுக்கு மாற்றுவீராக ஷமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் சிறந்த மாற்று வீரர் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் பும்ரா, ஜடேஜா ஆகிய வீரர்களை உங்களால் வேறு வீரர்களை கொண்டு நிரப்பிட முடியாது. ஆனால் தற்போது சிறந்த முடிவு என்றால் அது முகமது ஷமி தான்.

நல்ல முடிவு

நல்ல முடிவு

ஷமி, கடந்த காலங்களில் இந்திய அணிக்காக நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு அவரை அனுப்பியது நல்ல முடிவாக தான் இருக்கும். நடப்பு தொடரில் நாம் அச்சமின்றி விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். 15 நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியா சென்றது நல்ல முடிவு. அப்போது தான் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஏற்றவாரு இந்திய அணியால் செயல்பட முடியும் என்று சுரேஷ் என கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 18, 2022, 11:07 [IST]
Other articles published on Oct 18, 2022
English summary
Suresh raina prediction for indian team in icc t20 world cup அது மட்டும் நடந்தால், இந்தியாவுக்கு தான் உலககோப்பை- பும்ராவுக்கு மாற்று ஷமி கிடையாது.. ரெய்னா பேச்சு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+