வைரல் காய்ச்சலால் அவதி.. முதல் ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பில்லை
தரம்சாலா: நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்க முடியாத நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா, 16ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தரம்சாலாவில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக ஆயத்தமாகி வருகிறது.
வைரல் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா, உடல் நிலை தேறி வந்தாலும், முதல் போட்டியில் ஆட அவரால் முடியாது என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
அதேநேரம், டோணி தலைமையிலான 15 பேர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வீரர்களில் ரெய்னாவுக்கு பதிலாக, வேறு ஒரு வீரரை சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தரம்சாலாவுக்கு இந்திய அணி வீரர்கள் புறப்பட்டு சேர்ந்துள்ளனர். தனது செல்ஃபி படம் ஒன்றை விராட் கோஹ்லி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications