Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த வீரர் சியர்லீடர்சால தடுமாறுவாரு... கேள்வியால் மடக்கப்பட்ட ரெய்னா... சிறப்பான பதில்!

டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது மனைவி இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேட்டியளித்தனர்.

பிரபல டிவி தொகுப்பாளர் கபில் சர்மா தொகுத்த அந்த நிகழ்ச்சியில், ரெய்னாவை வம்பிழுக்கும் வகையில் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

மைதானத்தில் சியர்லீடர்சால் தடுமாறும் வீரர் யார் என்ற கேள்வியை சமாளிக்கும் வகையில் ரெய்னா சிறப்பான பதிலை அளித்தார்.

ரெய்னா, பிரியங்கா பங்கேற்பு

ரெய்னா, பிரியங்கா பங்கேற்பு

பிரபல டிவி தொகுப்பாளர் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது மனைவி பிரியங்கா ரெய்னா ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு பேட்டியெடுக்கும்போது எடக்குமடக்கான கேள்விகளை

கேட்பதில் பிரபலமானவர் கபில் சர்மா. ரெய்னாவையும் அவர் விட்டு வைக்கவில்லை.

சுரேஷ் ரெய்னா பதில்

சுரேஷ் ரெய்னா பதில்

மைதானத்தில் சியர்லீடர்சால் யார் அதிகமாக தடுமாறுவார்கள் என்ற கேள்வியை கபில் சர்மா கேட்டபொழுது, அதை அழகாக சமாளித்தார் சுரேஷ் ரெய்னா. சியர்லீடர்சை வீரர்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும் மைதானத்தில் இருக்கும்போது அவர்கள் தங்களது ஆட்டத்தில மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

டிவியில் பார்க்கும் வாய்ப்பு

டிவியில் பார்க்கும் வாய்ப்பு

மேலும் ரசிகர்களுக்காக மட்டுமே சியர்லீடர்ஸ் நடனமிடுவதாகவும் அவர் கூறினார். சில நேரங்களில் அவர்களின் ஆட்டத்தை வீரர்கள் டிவியில் பார்க்க வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார். தொடர்ந்து இதேபோன்ற ஒரு கேள்வியை பிரியங்கா ரெய்னாவிடம் கபில் சர்மா கேட்டார்.

இடையில் ஷாப்பிங்?

இடையில் ஷாப்பிங்?

சில நேரங்களில் வீரர்கள் டக் அவுட் ஆகும்போது, ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களது மனைவிகள் இடையில் ஷாப்பிங் கிளம்பி செல்வார்களா என்று பிரியஙகாவிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அதை மறுத்த அவர், அணியின் மற்ற வீரர்களை ஊக்குவிக்கும்வகையில் அங்கேயே இருப்போம் என்று தெரிவித்தார். ஆனால், அவரை வம்பிழுக்கும்வகையில், இது அடிக்கடி நடக்கும் என்று ரெய்னா இடையில் தெரிவித்தார்.

Story first published: Thursday, November 19, 2020, 15:58 [IST]
Other articles published on Nov 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+